பக்கம்:பாரதி தமிழ் வசனத் திரட்டு.pdf/97

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

பெண் 81 ஆண்டான், உடன் பிறந்தவள் அடிமை, ஸ்வாமி ? சுத்த பாமர ஜனங்கள் ' என்று சோன மாரியாகப் பொழிந்தார். இந்த சமயத்தில் என்னுடைய குழந்தை வீட்டிலிருந்து ஓடி வந்து என்னைச் சாப்பிடக் கூப்பிட்டது. நான் எழுந்தேன். "பிரம ராய வாத்தியார் சொல்லுகிற விஷயத்தைக் குறித்து உம்முடைய அபிப்பிராய மென்ன ?' என்று என்னை நோக்கிக் கொங்கண பட்டர் கேட்டார். நான் சொல்லத் தொடங்கு முன்னே, வீராசாமி நாயக்கர் மேற்படி பட்டாசார்யாருடைய தலையில் ஒரு குட்டுக் குட்டி, "நீர் சும்மா இருமே, ஒய்" என்று சொன்னர். பிறகு நான் :- "பூலோ கத்துப் பஞ்சாயத்தெல்லாம் எனக்கு வேண்டியதில்லே ஸ்வாமி, யாருக்கு என்ன காரியம் சித்தியாக வேண்டுமானலும், ஒம் சக்தி, ஓம் சக்தி என்று சொன்னல், அவர்களுக்கு அந்தக் காரியம் சித்தியாகும். இதுதான் எனக்கு தெரிந்த விஷயம் ” என்றேன். பிரமராய வாத்தியார் ' அது உண்மை” என்ருர். இடிப் பள்ளிக்கூட முழுவதும் வாஸ்தவந்தான் ' என்று ஒப்புக் கொண்டது. நான் போஜனத்துக்குப் புறப்பட்டேன். பா-6