பக்கம்:பாரதி தமிழ் வசனத் திரட்டு.pdf/99

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

தமிழ்நாட்டின் விழிப்பு 83 இந்த விஷயத்தில் அவருக்குப் பெரிய திருஷ்டாந்தமாகவும், துாண்டுதலாகவும் கிற்கிரு.ர். இவ்விருவராலும் இப்போது பாரத தேசத்தில் உண்மை யான பெண் விடுதலை உண்டாக ஹேது ஏற்பட்டது. இவ்விரு வருக்கும் தமிழுலகம் கடமைப் பட்டது. இவர்களுடைய கr என்னவென்ருல்: " ஸ்திரீகளுக்கு ஜீவன் உண்டு; மனம் உண்டு; புத்தி யுண்டு; ஐந்து புலன்கள் உண்டு; அவர்கள் செத்த யந்திரங் களல்லர். உயிருள்ள செடி கொடிகளைப் போலவு மல்லர். சாதாரணமாக ஆண் மாதிரியாகவே தான். புறவுறுப்புகளில் மாறுதல்; ஆத்மா ஒரே மாதிரி. ' இதனை மறந்து அவர்களைச் செக்கு மாடுகளாகப் பாவிப் போர் ஒரு திறத்தார். பஞ்சுத் தலையணேகளாகக் கருதுவோர் மற்ருெரு திறந்தார். இரண்டும் பிழை. ஸ்திரீகள் தமக்கிஷ்டமான பேரை விவாகம் செய்து கொள் ளலாம். விவாகம் செய்து கொண்ட புருஷனுக்கு ஸ்திரி அடிமை யில்லை ; உயிர்த்துணை ; வாழ்க்கைக்கு ஊன்றுகோல், ஜீவனிலே ஒரு பகுதி , சிவனும் பார்வதியும் போலே; விஷ்ணுவும் லக்ஷ்மியும் போலே. விஷ்ணுவும் சிவனும் பரஸ்பரம் உதைத்துக் கொண்ட தாகக் கதை சொல்லும் பொய்ப் புராணங்களிலே லக்ஷ்மியை அடித்தாரென்ருவது, சிவன் பார்வதியை விலங்கு போட்டு வைத்திருந்தாரென்ருவது கதைகள் கிடையா. சிவன் ஸ்திரியை உடம்பிலே பாதியாக தரித்துக் கொண்டார். விஷ்ணு மார்பில் மேலே இருத்தினர். பிரம்மா காக்குக்குள்ளேயே ம்னவியைத் தாங்கி கின்ருர். ஜகத்திற்கு ஆதாரமாகிய பெரும் கடவுள் ஆண் பெண் என இரண்டு கலைகளுடன் விளங்குகிறது. இரண்டும் பரிபூர்ணமான சமானம். பெண்ணே அணுவளவு உயர்வாகக் கூறுதலும் பொருந்தும். எனவே, இன்று தமிழ் நாட்டில் மாத்திரமே யல்லாது பூமண்டல முழுவதிலும், பெண்ணேத் தாழ்வாகவும் ஆணே மேலா கவும் கருதி நடத்தும் முறைமை ஏற்பட்டிருப்பது முற்றிலும் தவறு. அது துன்பங்களுக்கெல்லாம் அஸ்திவாரம்; அதிேகளுக் கெல்லாம் கோட்டை, கலியுகத்திற்குப் பிறப்பிடம்.