பக்கம்:பாரதி தாசரொடு பல ஆண்டுகள்.pdf/106

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

104

10 பாவேந்தரின் இலக்கியப் பணி இதுகாறும் பாவேந்தரின் வாழ்க்கைக் குறிப்புகள் சில வற்றைக் கண்டோம். இனி அவர்தம் இலக்கியப் பணி பற் றிப் பார்ப்போம்: பொதுவாக இலக்கியம் என்பது பற்றிப் பல கருத்து கள் வெளியிடப்பட்டுள்ளன. இலக்கியச் சிந்தனை, இலக்கிய எண்ணம், இலக்கிய நோக்கு, இலக்கியக் கலை, இலக்கியத் திறன் இலக்கியக் கொள்கை முதலிய பல தலைப்புகள் உடைய நூல்கள் பலரால் ஏராளமாக எழுதப்பட்டுள்ளன. யானும் என் நூல்கள் சிலவற்றுள், இலக்கியம் என்பது பற்றிக் கருத்து தெரிவித்துள்ளேன். ஈண்டு அவற்றை விரிப்பின் பெருகுமாதலின் விடுப்பாம். இலக்கியக் கொள்கைகள் - நோக்கங்கள் என்னென் னவோ அவையெல்லாம் அமையப் பாவேந்தர் பல இலக்