பக்கம்:பாரதி தாசரொடு பல ஆண்டுகள்.pdf/110

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

108

108 என்பது பாடலாகும். இங்கே குட்டைப் பனைமரம்தான் காதலன், ஈச்ச மரம்தான் காதலி. ஈந்து என்றால் ஈச்ச மரம். பனைமரம் மிகவும் நெட்டையாயிருக்கும். மிகவும் உயரமாய் இருப்பவரைப் பார்த்து, பனைமரம்போல் வளர்ந்து விட்டார்’ என்று கூறுவது உலக வழக்கம். ஆனால் ஈச்ச மரமோ பனைமரம்போல் இன்றி ஒரளவு உயரமே இருக்கும். காதலனும் காதலியும் கை கோத்துக் கொள்ள வேண்டுமெனில், நெட்டைப் பனைமரத்திற்கு ஒத்து வராது. அதனால்தான், ஈச்ச மரத்தோடு கை கோத்துக் கொள்ளக் குட்டைப் பனையால் முடிந்தது. காதலி ஈந்தின் கூந்தல் சரிந்தது எப்படி? பனைமரத்தின் மட்டைகள் நேர்க் கோட்டில் நீட்டிக்கொண்டிருக்கும். நாளாகிய பனை மட்டை இற்று விழும் நிலையில் கீழ் நோக்கித் தொங்குவதை இங்கே எடுத்துக் கொள்ளலாகாது. அடுத்து, ஈச்சமரத்தின் மட்டைகள் எப்போதுமே - இயற் கையாகவே சரிந்த நிலையில் இருக்கும். இந்த இயற்கை நிலைமை, இன்ப மயக்கத்தால் கூந்தல் சரிந்திருக்கும் நிலையை நினைவூட்டுகிறது. கைகோத்துக்கொள்ளலாவது: குட்டைப்பனைமரமும் ஈந்தும் பக்கத்தில்-பக்கத்தில் நெருங்கியிருப்பதால், பனை யின் மட்டைகள் ஈந்தின் மட்டைகளுக்குள்ளும் ஈந்தின் மட்டைகள் பனையின் மட்டைகளுக்குள்ளும் புகுந்து செருகிக்கொண்டிருக்கும் நிலை. இதுதான் கைகோத் துக் கொள்ளுதல் என்பது. - இன்ப வார்த்தைகள் பேசுதல் என்பது, காற்றினால் மட்டைகள் அசையும்போது ஏற்படும் ஒலியாகும். காதலி பெண்ணாதலின் அவளது சிரிப்பொலி பெரிதா யில்லை-காதலன் ஆடவ னாதலின் சிரிப்பொலி பெரிதாய்