பக்கம்:பாரதி தாசரொடு பல ஆண்டுகள்.pdf/19

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

17

3 நாட்டுப் பற்று பாவேந்தர் என்னிடம் கூறிய மிகவும் சுவையான செய்தி ஒன்று உள்ளது. இதை நான் கூட்டங்களில் கூடக் கூறியிருக்கிறேன். அதாவது: பிரெஞ்சுக்காரர் புதுச்சேரியை ஆண்டுகொண்டிருந்த போது, பிரிட்டிஷ் இந்தியாவில் விடுதலைப் போராட்டம் மிடுக்காக நடந்து கொண்டிருந்தது. அத்தகைய போராட் டம் புதுச்சேரியில் நடக்காதபடி பிரெஞ்சுக்கார ஆட்சி யினர் கண்காணித்து வந்தனர். குறிப்பாக, அரசு ஊழியர் கள் கதர் உடையும் காந்தி குல்லாவும் அணியக்கூடாது என்பது கடுமையான ஆணையாகும். - ஆனால், பிரெஞ்சு அரசுக் கல்வித்துறையில் பணி யாற்றிக் கொண்டிருந்த நம் கவிஞர் கதராடையும் காந்தி குல்லாவும் அணிவாராம். பிரெஞ்சுக்காரக் கல்வித்துறைத் தலைவர் விடுமுறையான ஒரு நாளில் தமது வீட்டில் – 2