பக்கம்:பாரதி தாசரொடு பல ஆண்டுகள்.pdf/23

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

21

21 அப்போது இளைஞர் காங்கிரஸ் இளைஞர் ஒருவர் கொடிக்கம்பத்தை இறுகப் பிடித்து அணைத்துக் கொண்டு தாய் நாட்டுக் கொடியைக் காப்பாற்றுங்கள் - தாய் நாட்டுக் கொடியைக் காப்பாற்றுங்கள் - என்று கூவி மக்களுக்கு வேண்டுகோள் விடுத்தார். பொறுக்கிகள் அவ ரைத் தாக்க முற்பட்டனர். அப்போது காவல்துறை வெள்ளையர் அந்த இளைஞரை ஏற இறங்கப் பார்த்தார். இளைஞரை ஒன்றும் செய்யாதபடி பொறுக்கிகளை அப் புறப்படுத்தினார்; மீண்டும் அந்த இளைஞரை ஏற இறங் கப் பார்த்தார். இளைஞரின் நாட்டுப்பற்றை உள்ளுக் குள்ளே மெச்சினார் போலும்! பிறகு ஒன்றும் செய்யாமல் கீழே இறங்கிப் போய் விட்டார். பின்னர் ஒர் இடையூறும் இன்றிக் கொடி பட்டொளி வீசிப் பறந்து கொண்டிருந்தது. இது நான் தெருவில் நின்று கொண்டு நேரில் கண்ட காட்சியாகும். பிரெஞ்சுக்காரர்கள் உரிமை (சுதந்திரம்), ஒரு நிகர் (சமத்துவம்), உடன் பிறந்தமை (சகோதரத்துவம்) என் னும் மூன்று கொள்கைகளைக் கொண்டவர்கள். அந்த அடிப்படையில், கற்றவரும் உலக வரலாறு அறிந்தவரும் ஆசிய காவல்துறைத் தலைவராகிய பிரெஞ்சுக்கார வெள்ளையர் கொடி ஏந்திய இளைஞரை ஒன்றும் செய்யா மல் போய் விட்டார்போலும். பாரதி தாசனாரின் உறுதியான நாட்டுப் பற்றை மெச் சிய கல்வித்துறை வெள்ளையரைப் போலவே, இந்த வெள்ளையரும் பாராட்டுதற்கு உரியவராவார். மேற்கூறிய செய்தி பாவேந்தரோடு தொடர்புடைய தன்றாயினும், செயல் ஒற்றுமையிருப்பதால், ஒன்றினம்