பக்கம்:பாரதி தாசரொடு பல ஆண்டுகள்.pdf/36

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

34

34 தெருவார் இறங்கிவிடும்படி மீண்டும் வற்புறுத்தவே, நானும் பாவேந்தரும் மெள்ளக் கீழே இறங்கிவிட்டோம். ஆனால், கவிஞரைக்காட்டிலும் மிக்க துணிச்சலுடைய திருநாவுக்கரசுமட்டும் இறுதிவரையும் கீழே இறங்க மறுத்துவிட்டார். அவர் எத்தகையவர் தெரியுமா? புதுச்சேரியில் யாராவது உறவினர் இறந்துவிடின், மாலை எரியூட்டிய பின், மறுநாள் காலை 7 மணிக்குப் பால் எடுத்துக்கொண்டு சுடுகாட்டிற்குச் செல்லும்போதுகாலையில் எழுந்திருக்க முடியாத திருநாவுக்கரசு, முதல் நாள் இரவே சுடுகாட்டுத் திண்ணையில் படுத்து உறங்கி, காலையில் பால் எடுத்து வரும் சங்கின் ஒலி கேட்டுத் திருப்பள்ளி எழுச்சி செய்யக் கூடியவர். அத்தகையவர் ஒரு குதிரைக்கு அஞ்சுவாரா? நானும் கவிஞரும் வற் புறுத்தி அவரையும் இறங்கச் செய்துவிட்டோம். திருமண வீட்டார் ஏதோ சில்லறை கொடுத்து இந்த வண்டியை அனுப்பி விட்டு வேறு வண்டி கொண்டுவரச் சென்று விட்டார். சென்ற இடமெல்லாம் சிறப்பு: பாவேந்தரை அடையாளம் கண்டு கொண்ட அக்கம் பக்கத்து வீட்டுக்காரர்கள், போட்டி போட்டுக்கொண்டு, தத்தம் வீட்டில் வந்து அமரும்படி பாவேந்தரை வேண்டி னர். அவர்களுள் ஒருவரின் கட்டாய-வற்புறுத்தலான அழைப்பின் பேரில் அவர் வீட்டிற்குச் சென்றோம். அவர் மேல் மாடிக்கு அழைத்துச் சென்றார்; அவர் பெயர் நினைவு இல்லை. உரையாடிக் கொண்டிருந்த சிறிது நேரத்திற்குள் இனிப்பு-காரம்-காபி-எல்லாம் வந்து விட் டன. அன்போடு விருந்தோம்பினார். அவரது அன்பை மறக்க முடியாத நாங்கள் அவருக்கு மிக்க நன்றி செலுத்