பக்கம்:பாரதி தாசரொடு பல ஆண்டுகள்.pdf/49

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

47

47 துரையும் மாலை ஆறு மணி ஆகியும் வரவில்லை. இருந்திருந்து பார்த்து விட்டுப் பெரியார் கூட்டத்தை ஆரம்பிக்கச் சொன்னார். பெரியார் தலைமையிலேயே கூட்டம் நடைபெறும் என்று சொல்ல ஒருவர் எழுந்த போது, விரைந்துவிரைந்து கவிஞர் வந்துவிட்டார். வேறு ஊருக்குச் சொற்பொழிவிற்காகச் சென்றிருந்த கவிஞர் அவ்வூரிலிருந்து நேரே பண்ணுருட்டிக்குவரச் சிறிது நேர மாய் விட்டது. கையில் பெட்டி (டிரங்) வைத்திருந்தார் கவிஞர். என்னை அங்கே பார்த்ததும், சண்முகம் இங்கேவா! பெட்டியைத் திறந்து கறுப்பு உடைகளை எடு; நான் முகங்கழுவிக்கொண்டு வந்து விடுகிறேன்’ என்று சொல்லிப் பெட்டியின் திறவு கோலை என்னிடம் தந்து சென்றார். நான் அவ்வாறே எல்லாம் எடுத்துவைத்து உதவி செய்தேன். கவிஞருக்குக்கிடைத்த தேநீர் முதலிய சிறப்புகள் எல்லாம் எனக்கும் கிடைத்தன. நெடு நேரம் கழித்ததும், எந்த ஊருக்கோ சென்றிருந்த அறிஞர் அண்ணாவும் வந்து சேர்ந்தார். அன்று பெரிய சொற் பொழிவு விருந்து கிடைத்தது. காதலா? கடமையா? கவிஞர் பெருமான் புனைந்த காவியங்களுள் ஒன்று "காதலா கடமையா?’ என்னும் பெயருடைய படைப்பு. செய்யுள் வடிவில் உள்ள இந்த நூலுக்குக் கதைச் சுருக் கம் எழுதும்படி கவிஞர் எனக்குக் கட்டளையிட்டார். அவ்வாறே யான் பத்துப் பக்கத்தில் கதைச் சுருக்கம் எழுதித்தந்தேன். இடையிடையே சிறந்த பாடல் பகுதி களையும் விதந்து எடுத்துத்தந்துள்ளேன். எழுதிய காலம் 1948 ஆகும்.