பக்கம்:பாரதி தாசரொடு பல ஆண்டுகள்.pdf/65

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

63

63 பிறகு ஒரு நாள் கவிஞரை வீட்டில் கண்டேன். அப் போது இன்னும் இருவர் அமர்ந்திருந்தனர். குமாரசாமி செட்டியாரின் பாராட்டு விழாவில் மற்ற புலவர்கள் மட்டப்படுத்தப்பட்டதைப் பற்றிக் கேட்டேன். அதற்கு அவர், சிரித்துக்கொண்டே நான் முன்கூட்டி அந்தக் கவிதைகளைப் பார்க்கவில்லைப்பா. பார்த்திருந்தால், சில பாடல்களை நீக்கச் சொல்லிவிட்டிருப்பேன் என்றார். பிறகு நான், தொல்காப்பியப் புலமையில் குமாரசாமி செட்டியாரை வென்றாரும் இல்லை - வெல்ல இணையாய் நின்றாருமில்லை என்று பாடப்பட்டிருக்கிறதே - இது வேறு யார் தவறும் இல்லை; குமாரசாமி செட்டியாருக்கு மட்டும் புரியும்படியாகவும் மற்றவர்க்குப் புரியாதபடியும் தொல்காப்பியத்தை எழுதி விட்டுப் போனானே தொல் காப்பியன் - அவனை மிதியடியால் அடித்திருக்க வேண்டும் - என்றேன். கவிஞரின் முகம் கறுத்து விட்டது - சினக் குறிப்பு காணப்பட்டது. உணர்ச்சிவயப்பட்டு நாம் சொல்லி விட்டோமே என்று அஞ்சினேன். ஆனால் கவிஞர் சமாளித்துக்கொண்டு, உடன் இருந்த இருவரை நோக்கி, குமாரசாமியைவிட சண்முகம் நல்ல ஆராய்ச்சியாளன்; நாம் இவனுக்குப் பாராட்டுவிழா நடத்த வேண்டும் என்று கூறிப் போக்கு காட்டி என்னை அமைதிப் படுத்தினார். நானாக இல்லாமல் வேறு யாரா வது கவிஞரிடம் இவ்வாறு கூறியிருந்தால், அவர் சினத்தை அடக்க முடியாதவராய் டேய் வெளியே போடா என்று விரட்டியிருப்பார். ஏதோ பழகிய பழக்கத்தால் என்னைப் பொறுத்தருளினார். நான் மெதுவாகத் தப்பித்துக் கொண்டு வந்துவிட்டேன்.