பக்கம்:பாரதி தாசரொடு பல ஆண்டுகள்.pdf/69

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

67

67 வின் வாயிலாகத் தமது அறிவுரையை உலகத்தாருக்கு வழங்கினார். மேலும், ஒளவையார் அதே ஆத்திசூடி நூலில் மற்றோரிடத்தில், உலகத்தில் போரே நடக்கக் கூடாது என்னும் பொருளில் போர்த்தொழில் புரியேல் என்று கூறிவைத்துள்ளார். இதற்கும் ஏட்டிக்குப் போட்டி யாகப் பாரதியார் தமது புதிய ஆத்திசூடி நூலில்போர்த் தொழில் பழகு என்று எழுதிவைத்துள்ளார், ஆனால், பாரதியாரின் பாடலுக்கு ஒரு வகையான வழுவமைதி கூறலாம். ஆங்கிலேயர்கள் இந்தியாவை அடிமைப்படுத்தி ஆண்டு கொண்டிருந்த காலத்தில், இந்திய மக்களுட் பலர் அவர் களை எதிர்த்துப் போராடிக்கொண்டிருந்தனர். அவ்விடு தலை வீரர்களுள் பாரதியாரும் ஒருவர். எனவே, இந்திய மக்கட்கு வீர உணர்வை ஊட்டுவதற்காக, அவர், 'முனை யிலே முகத்து நில், போர்த் தொழில் பழகு என்னும் புரட்சிக் கருத்தை வீசியிருக்கலாம். இது காலச் சூழ் நிலைக்கு ஏற்பக் கூறப்பட்டிருக்கலாம். எனவே, ஒளவையாருக்கும் நூற்றுக்கு நூறு மதிப் பெண் தரவேண்டும்; பாரதியாருக்கும் நூற்றுக்கு நூறு மதிப்பெண் தரவேண்டும். ஆனால், போர்த்தொழில் புரிவது இந்தக் காலத்திற்கு ஏலாதது; இந்தக் காலத்துக்கு ஒளவையார் கூற்றே பொருந்தும் - என்று கவிஞரிடம் துணிந்து கூறினேன். ஈண்டு, கவிஞரின் படைப்பாகிய ‘புதியதோர் உலகம் செய்வோம் - கெட்ட போரிடும் உலகத்தை வேரொடு சாய்ப்போம்’ (பாரதிதாசன் கவிதைகள் - முதல் தொகுதி) என்னும் பாடல் பகுதி ஒப்பு நோக்கத்தக்கது.