பக்கம்:பாரதி தாசரொடு பல ஆண்டுகள்.pdf/75

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

73

73 ஒரு நாள் நள்ளிரவில், சிகரெட் தீர்ந்து போனமை யால் பெட்டிக் கடைக்குச் சென்று கடைக்காரரை எழுப்பி னாராம். அன்று தற்செயலாக உள்ளே யாரும் படுத்திருக்க வில்லையாம். கூவிப் பார்த்து விட்டுக் கவிஞர் வீட்டிற்கு வந்தாராம். என்ன செய்வதென்று புரியவில்லையாம். பிறகு திடீரென ஒர் எண்ணம் தோன்றியதாம். அதாவது, இவ்வளவு நேரம் பிடித்துக் கீழே போட்டு விட்ட துண்டு சிகரெட்டுகளின் நினைவு வந்ததாம். உடனே அவற்றையெல் லாம் பொறுக்கி வைத்துக் கொண்டு ஒவ்வொன்றாகப் பயன்படுத்தி எழுத்துப் பணியைத் தொடர்ந்தாராம். பீடி பிடிப்பவர்களைத் துண்டு பிடிகள் என்று மட்ட மாய்ப் பேசுவதுண்டு. ஆனால், கவிஞரைப் பொறுத்த வரையும், துண்டு சிகரெட்டுகள் தமிழ்ப் பாடல்களின் தலை எழுத்தைத் தீர்மானித்துள்ளன. குறை கூறல்: ஒரு நாள் வெளியூரிலிருந்து வந்த ஒருவர் கவிஞரைக் கண்டு அவர் பாடலிலுள்ள கருத்துகள் சிலவற்றைப் பற் றிக் குறை சொன்னார். உடனே கவிஞருக்குச் சினம் பொங்கியது. கவிஞர் கூறியதாவது:- "நீ பெரிய குறை கண்டு விட்டாயா? நிறையே உனக்குத் தெரியாதா? உனது விருப்பம் போன்ற கருத்துடைய கவிதைகளை எழுத நான் எதற்கு? அதற்கு வேறு ஆள் பார்’ என்றார். மீண்டும், வந்தவர் முன்போலவே குறை சொல்லத் தொடங்கினார். உடனே கவிஞர் என் கருத்துகள் இவை, உனக்குப் பிடித்தால் வைத்துக் கொள். இல்லாவிடில் எழுந்து போயா என்று கூறி அவரை விரட்டினார். இவ் வாறு இன்னும் எவ்வளவோ செய்திகள் உண்டு.