பக்கம்:பாரதி தாசரொடு பல ஆண்டுகள்.pdf/79

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

77

77 தமிழ்ப் பாடல்: கவிஞர் வாழ்ந்த தெருவில் உள்ள பெருமாள்கோயி லில் ஒரு மார்கழி மாதத்தில் வைகறையில் திருப்பாவை முதலிய பாடல்கள் ஒலி பெருக்கி மூலம் பாடச் செய்யப் பட்டனவாம். சில நாள் பாடியதும் இடையிலே இது அரசுத் துறைவாயிலாக நிறுத்தப்பட்டதாம். சிலர், இது கவிஞருடைய வேலையாயிருக்கலாம் என்று எண்ணி, கவி ஞரிடம் சென்று, நீங்கள்தான் நிறுத்தச் செய்துவிட்டீர் களா? என்று வினவினராம், அதற்குக் கவிஞர், கோயில் களில் தமிழ்ப் பாட்டு பாடினால்போதும் என்று தவம் கிடக்கிற நான், தமிழ்ப் பாடலை நிறுத்தச் செய்வேனா? என்று பதில் இறுத்தாராம். கோயிலின் அருகில் குடி யிருந்த பெரிய அரசு அலுவலர் ஒருவரின் முயற்சியால் இது நிறுத்தப்பட்ட உண்மை பிறகு தெரிய வந்ததாம். தூங்குதற்கு இடையூறாயிருந்ததால் அவர் நிறுத்தினாராம். நூறாண்டு வாழ்வு: ஒருநாள் மறைமலை அடிகளாரின் நூறாண்டு வாழ் வது எப்படி?’ என்னும் நூலைப் பற்றிய பேச்சு வந்த போது, நூறுஆண்டு வாழாமல் போனால் என்ன என்று கவிஞர் கேட்டார். எழுதி வைக்கும் நினைவு: சலவைக்கு அழுக்குத் துணி போடுவதைப் பற்றிப் பேசிக் கொண்டிருந்தபொழுது, சலவைத் தொழிலாளி எத்தனையோ வீட்டு-எவ்வளவோ துணிகளை எடுத்துக் கொண்டுபோய்ச் சலவை செய்து, ஒன்று தவறாமல் அடையாளமாய்க் கொண்டு வந்து தருகிறான்; ஆனால் ,