பக்கம்:பாரதி தாசரொடு பல ஆண்டுகள்.pdf/86

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

84

84 நான் அவர்கட்கு ஆறுதல் கூறினேன். ஆர்வமுடன் எழுதும்போது இடையூறு செய்தால் பட்டுநூல் கயிறு’ அறுந்துவிடும். அதனால்தான் கவிஞர் வருத்தப்பட்டிருக் கிறார். அவர் குழந்தை உள்ளம் கொண்டவர்; அதனால் தான் குழந்தை முரண்டுவதுபோல் வந்தவர்களிடம் நடந்து கொண்டுள்ளார். அவர் மதியம் உணவருந்தி இளைப்பாறி ஒய்வு எடுத்துக் கொண்ட பின்பு மாலையில் நீங்கள் வந்து பார்த்தால் நல்ல வரவேற்பு கிடைக்கும் என்ற குழ் வுரையை அவர்களுக்குக் கூறி நானும் வந்த வழியே வீடு திரும்பி விட்டேன். பிறகு ஒரு நாள் ஒரிடத்தில் ஆசிரியர் வடமலையைக் கண்டபோது இது குறித்து விசாரித்தேன். அவர் நல்ல பதில் சொன்னார். அதாவது:- அன்று பிற்பகல் நான் மட் டும் சென்று கவிஞரைக் கண்டு நிலைமையைக் கூறினேன். கேட்டதும் கவிஞர் அவ்விருவரையும் அழைத்து வரச் சொன்னார். காலையில் நிகழ்ந்ததற்கு வருத்தப்படாதீர் கள் என்றார். எல்லோருக்கும் தேநீர் தரப்பட்டது. பிறகு அன்போடு அளவளாவி மகிழ்ந்து வெளியூரார்கள் விடை பெற்றுச் சென்றனர். கவிஞர் கோபக்காரரானாலும் குழந்தை போன்றவர் என்பதை அவர்கள் முன் கூட்டி அறிந்திருந்ததால், உணர்ச்சி வயப்படாமல் மாலைவரை. பொறுமையுடன் இருந்து கவிஞரைக் கண்டு சென்றிருக் கின்றனர் என்று வடமலை என்னிடம் கூறிய போது யானும் மகிழ்ச்சி யடைந்தேன். புரிகிறதா?: மற்றொரு நாள் வெளியூரார் ஒருவர் கவிஞரிடம் வந்து பேசிக்கொண்டிருந்தார். சிலர் உரையாடலின் இடை