பக்கம்:பாரதி தாசரொடு பல ஆண்டுகள்.pdf/89

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

87

87 தில் உள்ள வாழைக் குலைகளையெல்லாம் வெட்டி யாருக் கும் கொடுக்காமல் தலைமையாசிரியர் தம் வீட்டிற்கே எடுத்துச் செல்வது வழக்கமாம். கவிஞர் இந்தத் துருப்புச் சீட்டை அடித்து வெற்றி பெற்றாராம். அதாவது,தலைமையாசிரியர் பள்ளிக் கூடத் தோட்டத்தில் உள்ள வாழைக்குலை-முருங்கைக்காய் முதலியவற்றையெல்லாம் யாருக்கும் தராமல் தம் வீட்டிற்கே எடுத்துச் சென்று விடு கிறார்; மற்றவர்க்கும் தரும்படி யான் கூறினேன். இல்லை யேல் இப் பொருள்களை விற்றுப் பள்ளிக்கு வேண்டிய சுண்ணக்கட்டி (சாக்பீசு) முதலிய பொருள்களை வாங்க லாம் என்றேன் நான் இது பொறுக்காமல் தலைமையாசிரி யர் என்னைத் தொலைக்கப் பார்க்கிறார் என்றாராம் கவிஞர். மேலாளர் கவிஞரை ஒன்றும் செய்யாமல் சிரித் துக் கொண்டே போய் விட்டாராம். இது கவிஞரே என்னி டம் நேரில் சொன்னது. ஐந்தாம் ாேர்ஜ் மன்னர்: கவிஞரின் சீர்திருத்தக் கொள்கையும் தமிழ் இயக்கக் கொள்கையும் பிடிக்காத கல்வித்துறை மேலாளர் ஒருவர், கவிஞரை வேலையை விட்டுத் துரத்த ஏற்பாடு செய் தாராம். இந்தச் செய்தி படிப்படியாகப் பிரெஞ்சுக்கார ஆளுநர் (கவர்னர்) வரைக்கும் சென்றதாம். ஆளுநர் கவி ஞரை விசாரித்தாராம். நீர் கல்வித்துறைக்கு எதிர்ப்பான செயல்கள் புரிவதாகச் சொல்கிறார்களே! உம்மை வேலையை விட்டு நீக்கினால் என்ன?-என்று ஆளுநர் கேட்டாராம். அவருக்குக் கவிஞர் சொன்ன பதிலாவது: புதுச்சேரிக் கல்வித் துறையினர் தமிழ் நாட்டிலிருந்து தமிழ்ப் பாட நூல்களைத் தருவிக்கிறார்கள். அப் புத்த கங்களில், “வாழ்க வாழ்கவே ஐந்தாம் ஜார்ஜ் மன்னர்