பக்கம்:பாரதி தாசரொடு பல ஆண்டுகள்.pdf/97

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

95

95 ஓரணா தருவது, இப்போது ஒர் உரூபா கொடுப்பது போன்றதாகும். எங்கேயாவது - ஏதாவது வேலை வாங்கித் தரும்படி பலர் கவிஞரிடம் வந்து முறையிடுவது உண்டு. அவரவர்க் கும் குளிர்ச்சியாகத் தக்க வழி சொல்லி அனுப்புவார். தம்மால் இயலக்கூடிய தாயின் வேலையும் வாங்கித் தரு aQJfT.fr. ஒருநாள், அண்ணாமலைப் பல்கலைக் கழகத்தில் இசைக் கலையில் சங்கீத பூடணம் பட்டம் பெற்ற ஒரு வர் வந்து, தமது ஏழமையைக் கூறி வாழ்க்கைக்கு ஏதாவது ஏற்பாடு செய்து தரும்படி முறையிட்டுக் கொண்டார். அந்த நேரம் கிட்டத்தட்ட மதிய உணவு கொள்ளும் நேர மாகும். கவிஞர் அவரை நோக்கி, முதலில் நீ போய் ஒட்ட லில் சாப்பிட்டு வா என்று கூறி முக்கால் உரூபா தந்தார். அந்தக் காலத்தில் புதுச்சேரி உணவுக் கடைகளில் முழுச் சாப்பாடு முக்கால் உரூபாதான். அவ்வாறே அவர் சென்று சாப்பிட்டு வந்தார். மேலும் அவரைச் சிலநாள் வைத் திருந்து ஆதரித்தார். அப்போது தம் பாடல்கள் சிலவற் றிற்கு இசையமைத்துக் கொடுக்கச் சொல்லி வாங்கி வைத்துக் கொண்டார். பிறகு, எங்கோ சென்று யாரையோ பார்க்கும்படி ஒரு பரிந்துரைக் கடிதம் கொடுத் தனுப்பினார். எங்கே-யாரை-என்பது இப்போது எனக்கு நினைவில்லை. இவ்வாறாக, கவிஞரின் குழந்தை உள்ளத்தையும் அருள் உள்ளத்தையும் பற்றி இன்னும் எவ்வளவோ கூறலாம். ஒரு சோறு பதம் போதும் என எண்ணுகிறேன்.