பக்கம்:பாரதி - சில பார்வைகள்.pdf/5

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

முதற் பதிப்பின் முன்னுரை நாற்பதாண்டுக் காலம் கூட முழுமையாக வாழாமல் நம்மை விட்டுப் பிரிந்து சென்றவன் , 'பாரதி. ' இந்த நாற்பதுக்கும் குறைவான ஆயுட் காலத்தில், அவன் தேசிய , கவியாகப் பரிணமித்து, மகா கவியாக மலர்ந்து மணம் பரப் யே இலக்கிய வாழ்க்கைக் காலம் பதினாறே ஆண்டுகள் தான், இந்தப் பதினாறு ஆண்டுக் காலத்தில். அவன் படைத்தளித்த, கவிதைகள் தான் அற்பாயுளில் - உயிர் நீத்த பாரதியை அழியாப் புகழ் படைத்த அமர கவிஞனாக்கி யுள்ளன. இன்று பாருலகே அஞ்சலி செலுத்தும் விதத்தில் தன து முதல் நூற்றாண்டு விழாவைக் காணும் அந்தக் கவிஞன், இலக்கிய உலகில் இன்னும் பல்லாண்டுக் காலம் வலுவும் வியப்பும் குன்றாமல் ஆட்சி செலுத்தி வருவான் என்பதும், பல நூற்றாண்டு , விழாக்களைக் காண்பான் : என்பதும் நிச்சயம், எனவே இத்தகைய கவிஞனைப் பலவாறும் ஆழமாக ஆராய்ந்து எழுதுவதற்கு ' விஷயமும் உண்டு; அதற்கான அவசியமும் உண்டு, என்னைப் பொறுத்தவரையில் பிள்ளைப் பருவம் முதலே பாரதியிடம் ஈடுபாடு அதிகம். மேலும், எனது இலக்கிய, அரசியல், சமுதாயக் கருத்துகள் பலவற்றை உருவாக்கு வதிலும் பாரதி பெரும் பங்கு வகித்திருக்கிறான். இதனால் அவனது படைப்புக்கள் அனைத்தையும் ஆழமாகப் பயின்று புதிய உண்மைகளைக் காண்பதில் நான் பல்லாண்டுகளாகவே ஆர்வத்தோடு ஈடுபட்டு வந்திருக்கிறேன். இதன் பயனாக நான். “கங்கைஅம் காவிரியும்' (தாகூரும் பாரதியும்}," "பாரதி