பக்கம்:பாரதி - சில பார்வைகள்.pdf/7

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

(1967), இந்தத் தலைப்பில் பாரதியின் 'வேதாந்தப் பாடல்கள் வரிசையில் இடம் பெற்றுள்ள பாடல், உண்மை யில் வேதாந்தப் பாடல் அல்ல என்ற உண்மையை நிறுவிக் காட்டுவ தாகும். 'தாயின் மணிக்கொடி' (1966) பாரதி இனம். காட்டியுள்ள கொடி எழுப்பிய புதிருக்கு முதன் முதலில் விடை கண்ட கட்டுரையாகும். இந்தக் கட்டுரை வெளி வந்த சமயத்தில் பாரதி ஆராய்ச்சியாளரான திரு. ரா. அ., பத்மநாபன் எனக்கு எழுதிய கடிதம் ஒன்றில் இவ்வாறு எழுதியிருந்தார்:- • 'செப்டம்பர் 'தாமரை' இதழில் பாரதியின் 'தாயின் மணிக்கொடி' பற்றிய ஆராய்ச்சிக் கட்டுரையைப் படித்து மகிழ்ந்தேன், எனக்கும் இதே 'சந்தேகங்கள் இருந்தன, ஆனால் கல்கத்தாவில் முதலில் தோன்றிய கொடியின் விவரம் தெரியாததால் தவித்ததுண்டு. இப்போது உங்கள் கட்டுரை மூலம் அதை அறிந்து மகிழ்ந்தேன். மிக்க நன்றி. இன்று, பெரியசாமித் தூரன் அவர்கள் இந்த விஷயமாய் அகஸ்மாத்தாக டெலிபோன் செய்தார். அவருக்கும் கொடி பற்றிய சந்தேகங்கள் எழுந்திருக்கின்றன! . உ ங் க ள் கட்டுரையை அ வ ர் 'பார்த்ததில்லை, பார்க்குமாறு சொன்னேன். அடுத்து இடம் பெற்றுள்ள. 'பரிசு பெறத் தவறிய பாடல்' (1979) பாரதியின் பிரசித்தமான' (செந்தமிழ் நாடு: என்ற பாடலின் தோற்றக் காலம் பற்றிய ஆராய்ச்சியின் போது , தெரிய வந்த சுவையான தகவல்களைக் கூறும் கட்டுரையாகும். 'புதிய ருஷ்யாவும் பாரதியும்' (1966) என்ற கட்டுரை மகத்தான அக்டோபர் புரட்சியைத்தான் பாரதி போற்றிப் பாடினான் என்பதை நிறுவிக் காட்டும் கட்டுரையாகும். இந்தப் பொருள் குறித்து முதன் முதலில் வெளிவந்த முழுமையான கட்டுரை இதுவே எனச் சொல்ல லாம். இந்தக் கட்டுரைக்குப் பின் நான் தெரிய வந்த புதிய உண்மைகளை 'அக்டோபர் புரட்சியும் தமிழ் இலக்கியமும்" என்ற எனது நூலிலும், வேறு பல , கட்டுரைகளிலும்