பக்கம்:பாரதி - சில பார்வைகள்.pdf/8

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

தெரிவித்திருக்கிறேன், கடந்த பதினைந்து ஆண்டுக் காலத் தில் இதே பொருள் குறித்து நான் செய்து வந்துள்ள -ஆராய்ச்சியின் மணிச் சுருக்கமான தொகுப்பும் சாரமுமே, இந்தப் பாரதி நூற்றாண்டில் நான் எழுதி வெளியிட்ட

  • கிருதயுகம்' என்ற கட்டுரையாகும். இதனைக் குறித்து

இலங்கையைச் சேர்ந்த பிரபல இலக்கிய விமர்சகர் டாக்டர் திரு. 5 , கைலாபதி எனக்கு எழுதியுள்ள கடிதத்தில், “'கிருத புகள் பற்றிய கட்டுரை அவ் விஷயத்தைத் தீர்க்கமான ஒரு முடிவுக்குக் கொண்டு வந்துள்ளது என்பதில் ஐயமில்லை எனக் குறிப்பிட்டிருக்கிறார். . அடுத்துள்ள “பாரதியும் தாகூரும்* (1961), கவியரசர் தாகூரின் நூற்றாண்டு விழாச் சமயத்தில் எழுதப்பட்டது . இதன்பின் விரைவில் தான் எழுதி வெளியிட்ட 'கங்கை யும் காவிரியும்' என்ற ஒப்பீட்டு நூலுக்கு இதுவே முன்னோடியாக விளங்கியது. இறுதியில் இடம் பெற்றுள்ள “லீடுட்டு வெளியும் * {1981), 'பாரதியும் தேசிய ஒருமைப் பாடும்' (1973), 'பாரதி பரம்பரை' (1954), 'பாரத சமுதாயப் பாடல்' (1956) ஆகிய நான்கும், பாரதியின் தேசிய, சர்வதேசிய நோக்கையும், அவனது புகழ்க் காரணத்தையும், இன்றும் பாரதியைப் பற்றி எழுப்பப்படும் ஐயப்பாடுகளுக்கும், அவன் மீது பொழியப்படும் அவதூறு சளுக்கும் உரிய பதில்களையும் கூறும் கட்டுலரகளாகும். இந்தக் கட்டுரைகள் அனைத்தையும் அவை வெளிவந்த காலத்திய வடிவத்திலேயே பெரும்பாலும் வழங்கியுள்ளேன். பின்னர் தெரியவந்த புதிய செய்திகளை அவற்றோடு சேர்க்க வில்லை, எனினும் அத்தகைய செ ய்திகள் சிலவற்றை அவசி t:த்தை முன்னிட்டு ஓரிரு கட்டுரைகளில் பின் - குறிப்பாகச் சேர்த்திருக்கிறேன், பாரதியைப்பற்றி நாம் ஆராயும்போது அவன் இலக்கிய கர்த்தாவாக மட்டுமல்லாமல், அரசியல்வாதியாகவும் திகழ்ந் தாள் என்ற உண்மையை மறக்க முடியாது; மறக்கக் கூடாது. 'நமக்குத் தொழில் கவிதை; நாட்டிற் குழைத்தல்'