பக்கம்:பாரதி - சில பார்வைகள்.pdf/9

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

என்பது அவனது மணிவாக்கு. இதற்கொப்ப அவனிடத்தில் நாடும் மொழியும், இலக்கியமும் அரசியலும் பின்னிப் பிணைந்தே இருந்தன, இவற்றைப் பிரித்துப் பார்ப்பதற் இல்லை. எனவே இந்த நூலில் இடம் பெற்றுள்ள கட்டுரைகள் வெவ்வேறு விஷயம் பற்றியவையாயினும், அவை யாவற்றிலும். - இந்தக் கண்ணோட்டத்தோடு, வரலாற்று உண்மைகளின் அடிப்படையில், பாரதியின் இலக் கியப் படைப்புகளை ஆராயும் ஒருமைத்தன்மை அடிச்சர் டாக ஊடுபாய்ந்திருப்பதை எவரும் காணலாம், இந்தக் கட்டுரைகளில் நான் தெரிவித்துள்ள கருத்துக்களிலும் முடிபு களிலும் கருத்து வேற்றுமை கொள்பவர்கள் இருக்கலாம். எனினும் அவற்றுக்குத் துணை நிற்கும் ஆதாரங்கள் பல வற்றையும் நான் போதிய அளவுக்கு வழங்கியே இருக்கிறேன். இந்த நூலில் வாசகர்கள் உசாரதியைப் பற்றிய பல புதிய உண்மைகளையும் செய்திகளையும் நி ச் ச ய ம் காண முடியும். இந்தக் கட்டுரைகள் இலங்கை தினகரன், மற்றும் தாமரை, சாந்தி, ஜனசக்தி, தீபம் முதலிய பத்திரிகைகளில் வெளிவந்தவை, இவற்றை வெளியிட்ட பத்திரிகை ஆசிரியர் களுக்கு எனது உளமார்ந்த நன்றி உரியது ரகுநாதன்