பக்கம்:பாரதீயம்.pdf/108

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

92 பாரதீயம்

பார்ப்பன குலத்தில் பிறந்த வேறு ஆழ்வார்கள் தம் தலைவராகவே கொண்டனர். சண்டாள சண்டாளர்களாயினும் அவர்கள் மணிவண்ண லுக்கு ஆள் ஆகிவிட்டால் அவர்கள் உயர்ந்தவர்கள் ஆகின்றனர் என்பது நம்மாழ்வாரின் கருத்து. இங்ஙனமே வேளாளர் குலத்தில் உதித்த நாவுக்கரசர் பார்ப்பன குலத்தில் பிறந்த சம்பந்தராலும் நம்பியாரூராலும் போற்றப்பெற்றார். பாரதியார் சாதிக்கொள் கைக்கு அப்பாற்பட்ட ஒரு வேதாந்தி, வசன கவிதையில் அவ: :வைதிகம்’, வைதிக மனுஷன் (Orthodox man) என்றே கட்டப் பெறுகின்றார். இந்த வைதிகப் பார்ப்பார்தான்,

கந்தனைப் போல ஒரு பார்ப்பான் - இந்த

காட்டினில் இல்லை; குணம்நல்ல தாயின் எந்தக் குலத்தின ரேனும் - உணர் .

வின்பம் அடைதல் எளிதெனக் கண்டோம். ‘ இதே பாடலில்,

சூத்திர னுக்கொரு நீதி - தண்ட

சோறுண்ணும் பார்ப்புக்கு வேறொரு திே: சாத்திரம் சொல்லிடு மாயின் - அது

சாத்திரம் அன்று சதினன்று கண்டோம். என்று வற்புறுத்திப் பேசுவர். மேற்குலத்தவர் யாவர்: கவிஞரையே கேட்போம்:

வையகம் காப்பவ ரேனும் - சிறு

வாழைப் பழக்கடை வைப்பவ ரேனும் பொய்யக லத்தொழில் செய்தே - பிறர்

போற்றிட வாழ்பவர் எங்கனும் மேலோர். என்று இதே கவிதையில் அடித்துப் பேசுவர்.

சஜாதிக் குழப்பம் என்ற தலைப்பில் பாரதியார் குறிப்பிடும் நிகழ்ச்சி ஒன்று, சாதிக் கொள்கை எவ்வளவு ஆழத்தில் வேரூன்றி யுள்ளது என்பது தெரியவரும். கடையத்தில் (கெல்லை மாவட்டத்தி லுள்ள ஒர் ஊர்)ஒரு செல்வந்தர் வீட்டுச் சிறப்பு நிகழ்ச்சிக்கு கோவில் யானையைக் கொண்டுவந்திருந்தனர். அது ஆண்யானை: 18 வய துள்ள குட்டி, துஷ்ட யானை என்று பேர் பெற்றிருந்தது. இந்த யானைக்கு மாவுத்தர் ஒரு பிராமணன் (சாதாரணமாக முகம்மதியரும் இந்துக்களில் தணிந்த சாதியாருமே மாவுத்தராக இருப்பது

42. திருவாய். 3. 7 ; 9. 43. வசன கவிதைகள் : 3 காற்று -(1) 44. புதிய பாடல்கள் - 19 உயிர்பெற்ற தமிழர் பாட்டு

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:பாரதீயம்.pdf/108&oldid=681127" இலிருந்து மீள்விக்கப்பட்டது