பக்கம்:பாரதீயம்.pdf/120

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

104 பாரதீயம்

பின்ன ருள்ள தருமங்கள் யாவும்

பெயர்வி ளங்கி யொளிர நிறுத்தல்,

அன்ன யாவினும் புண்ணியம் கோடி

ஆங்கோர் ஏழைக் கெழுத்தறி வித்தல்”

என்று பேசுவர். அப்பொழுதுதான் தமிழகம் கல்வி சிறந்த தமிழ் நாடு என்ற பழம்பெரும் புகழை நிலைநிறுத்தும் என்பது கவிஞரின் நீள் நோக்கு. கல்விபற்றிய இவர்தம் சிந்தனை பல கிளைகளில் சென்துள்ளது என்பதையும் காண்கின்றோம். நாற்றங்கால்களை நன்கு கவனித்தால்தான் உழவுத் தொழில் வளமாக அமையும். அதுபோலவே குழந்தைகளைத் தொடக்கத்திலிருந்தே சிறந்த முறை யில் கல்வி கற்றலில் ஈடுபடுத்த நினைக்கும் கவிஞர்,

காலை எழுந்தவுடன் படிப்பு- பின்பு

கனிவு கொடுக்கும் நல்ல பாட்டு; மாலை முழுதும்விளை யாட்டு- என்று

வழக்கப் படுத்திக்கொள்ளு பாப்பா! A

என்று பாப்.ாவுக்கு-குழந்தைக்கு-அன்பு வழியில் அறிவுரை பகர் கின்றார்.

தொடக்கநிலைக் கல்விக்கு ஒரு பாடத்திட்டத்தையே வகுத்துக் காட்டுகின்றார். (அ) எழுத்து, படிப்பு, கணக்கு; (ஆ) இலேசான சரித்திரப் (வரலாற்றுப்) பாடங்கள்; (இ) பூமி சாஸ்திரம் (புவியியல்); (ஈ) மதப்படிப்பு (சமயக் கல்வி); (உ) ராஜ்ய சாஸ்திரம் (Civics); (ஊ) பொருள் நூல் (Economics); (எ) சயன்ஸ் அல்லது பெளதிக சாஸ்திரம் (இயற்பியல்-Physics) (ஏ) கைத்தொழில், விவ. சாயம் (வேளாண்மை), தோட்டப்பயிற்சி (Gardening), வியாபாரம் (வாணிகம்); (ஜ) சரீரப் (உடற்) பயிற்சி; (ஒ) யாத்திரை (சுற்றுலா(Excursion). இவற்றை அநுபவ அடிப்படையில் கற்பிக்க வேண்டும் என்று சுட்டியுரைக்கின்றார். நடைமுறையில் மேற்கொள்ள வேண்டியதற்குப் பொதுக் குறிப்புகளையும் தருகின்றார். தாய்மொழி மூலம் கல்வி பயிற்றப் பெறுதல் வேண்டும் என்பது இவர்தம் உயிராய கொள்கை.

ஆங்கிலக் கல்வி : ஆங்கிலக் கல்வி பற்றி இவர் கூறும் கண் டனக் கருத்துகள் மிகைபடக் கூறுவதாகவே தோன்றுகின்றன. காந்தியடிகள், நேரு, இராஜாஜி போன்ற பெருந்தலைவர்கள் இம்

. 6723 - 9. - 4. ப.பா. பாப்பா பாட்டு-6. 5. பாரதியார்-கட்டுர்ைகள். பக். 353-365

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:பாரதீயம்.pdf/120&oldid=681141" இலிருந்து மீள்விக்கப்பட்டது