பக்கம்:பாரதீயம்.pdf/14

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

ΧΕΥ

செகப்பிரியரின் ஆங்கில நாடகங்களை ரசனைப் பண்புடன் தமிழ் மக்கட்குத் தமிழில் வழங்கினவர். திருமூலரின் இதயத்தை கன்கு அறிந்த பெரியார். இத்தனைக்கும் மேலாகப் பண் புடையார் பட்டுண்டு உலகு என்ற வள்ளுவர் வாக்குக்கு இலக்கிய மாகத் திகழ்பவர். இவர் துரத்துக்குடி மாவட்ட நீதிபதியாக இருந்த காள் முதல் (1949) மறைந்த நாள் வரை (1982) இவரை நன்கு அறிவேன். காரைக்குடிக் கம்பன் அடிப்பொடியால் எனக்கு அறிமுகம் ஆனவர். நான் காரைக்குடியில் பணியாற்றியபோது ஆண்டுதோறும் இவரைச் சந்தித்து அன்புரையாடும் வாய்ப்பு இருந்து வந்தது. திருப்பதியில் பணியாற்றியபொழுது அப்பல்கலைக் கழகத்தில் கடைபெற்ற கம்பராமாயணக் கருத்தரங்கை இவரைக்கொண்டு தொடங்கி வைத்தேன். இவருடைய ஆங்கிலப் பேருரையைக் கேட்ட பல நூற்றுக்கணக்கான .ெ த லு ங்கு அன்பர்கள் தம் மூக்கின்மேல் விரல்வைத்து மகிழ்ந்தனர். இத்தகைய பேரன்பர்க்கு இந்த நூலை அன்புப்படையலாக்கி மகிழ்கின்றேன். அமரத்துவம் பெற்ற இவர்தம் ஆசியால் இலக்கியங்களைச் சுவைக்கும் பழக்கம் என்னிடம் மேன்மேலும் வளரும் என்பது என் திடமான கம்பிக்கை.

இச்சமயத்தில் பாரதியாரின்,

செய்யும் கவிதை பராசக்தி

யாலே செயப்படுங்காண்.:

பாட்டினிலே சொல்லுவதும்

அவள்சொல் லாகும்.”

என்ற வாக்குகளைச் சிந்திக்கின்றேன். பாரதியார் கருதுவதுபோல் இந்நூலை, யான் எழுதி வெளியிட்ட தற்கு என்னுளே அக்தர் யாமியாக இருக்கும் திருவேங்கடமுடையானே காரணன் ஆவான். அவனே எனக்கு கோயற்ற கிலையையும் எல்லா நலன்களையும் ஈந்து என்னை இயக்கி கன்னெறிப்படுத்தி வருபவன். அவனே பாரதியார் வழிபடும் கண்ணனாகவும், கோவிந்தனாகவும், இராமனாகவும் இருந்து வருகின்றான்; அவனை மனம், மொழி, மெய்களால் வழுத்தி இறைஞ்சி வணங்குகின்றேன். r

எனியனேன் யானெளலை எப்போது

போக்கிடுவாய், இறைவனே இவ்

4. வி. கா. மா-26 5. தேச. பா : பேதை கெஞ்சே.5.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:பாரதீயம்.pdf/14&oldid=681162" இலிருந்து மீள்விக்கப்பட்டது