பக்கம்:பாரதீயம்.pdf/166

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

f 50 பாரதீயம்

பேசுகின்றனர்; அவர்கள் அழைப்பை ஏற்க ஒருப்படவில்லை. அப் போது பல நியாயங்களை எடுத்துரைக்கும் தருமன் எல்லாம் விதிப் படி நடக்கும்’ என்னும், கடமையை ஆற்றுவது தம் கடன் என்றும் கூறுகின்றான்.

(3) பாண்டவர் அத்தினபுரத்திற்குப் பயணப்படுகின்றனர். இப்போது கவிப்பரிவு (Poetic sympathy) செயற்படுகின்றது. இது கவிஞரின் தற்கூற்றாக, விதியைப்பற்றிய விளக்கமாக வெளிப்படுகின்றது. இந்தப் பயணத்தை நெடுங்கரத்து விதிகாட்டும் நேறி என்றே குறிப்பிடுகின்றார், கவிஞர். மேலும், விதியின் திரு விளையாடல்களை நரிவகுத்த வலையினிலே (1.26 : 146) என்ற பாடலில் தமக்கே உரிய முறையில் மிக அற்புதமாகக் காட்டுவர்.

(4) நாட்டினைப் பணயம் வைக்குமாறு தருமனிடம் சகுனி சொல்லும்போது விதுரன் வெகுண்டெழுந்து அறவுரை கூறுகின்றான். இதனைக் கேட்ட சுயோதனன் விதுரனைப் பலவாறு ஏசுகின்றான். அதற்கு விதுரன் மறுமாற்றம் உரைக்கும்போது தன்னை விதி வழியை நன்குணர்ந்தவனாகக் குறிப்பிடுகின்றான். சரி சரி; இங்கேதுரைத்துப் பயனொன்றில்லை; மதிவழியே செல்லுக என்று வாய்மூடி மெளனி யாகின்றான். -

(5) தலைவிரிகோலமாக அவைக்கு இழுத்து வரப்பெற்ற திரெளபதியின் அவல நிலையைக் கண்ட வீமனின் வெஞ்சினம் கரைபுரண் டோடுகின்றது. கதிரை வைத்திழந்தான் கையை எரித் திட எரிதழல் கொண்டுவா என்று சகாதேவனைப் பணிக்கும் போது, பார்த்தன் குறுக்கிட்டுப் பேசும் பேச்சில் விதியின் வலி: சுட்டப்பெறுகின்றது. தருமத்தின் வாழ்வதனைச் சூது கவ்வும்: (5.67: 283) என்ற அற்புதமான பாடலில் விதியின் சதியைக் காட்டுகின்றார் கவிஞர்.

மேற்கூறியவாறு பாரதியின் பாடல்கள் உணர்த்தும் உண்மைகள்வாழ்க்கை உண்மைகள் - பலவாகும். தமிழ் இலக்கியத்தைப் பொறுத்தவரை, கவிதையின் பொருளமைப்பே முக்கியமாகக் கொள்ளப்பெறுகின்றது. தமிழர்கள் இன்பம் என்ற சொல்லுக்குக் கண்ட பொருள் சற்று ஆழமுடையது. நிலைபேறுடைய இன்பத் தைத் தருவது எதுவாயினும் அஃது உண்மையும் ஆழகும் உடைய தாயிருத்துல் வேண்டும் என்பது அவர்கள் கொள்கை. மேனாட்டுத் திறனாய்வாளர்களிலும் சிலர் இக்கொள்கையையுடையவர்கள். ‘கவிதையை ஆராயுங்கால், நம்முடைய முதற்சவனம் கவிஞன்பால் செல்ல வேண்டும்; அவன் ஆளுமையிலும் அவன் உலன்கப்பற்றிக் கொண்டுள்ள மனப்பான்மையிலும் செல்ல வேண்டும்; வாழ்க்கையை எவ்வாறு நோக்கி விளக்கந் தருகின்றான் என்பதைக் கவனித்தல்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:பாரதீயம்.pdf/166&oldid=681191" இலிருந்து மீள்விக்கப்பட்டது