பக்கம்:பாரதீயம்.pdf/167

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

வாழ்க்கை உண்மைகள் #51

வேண்டும். இது வெளிப்படையாகவும் இருக்கலாம்; குறிப்பாகவும் இதனைப் பெற வைக்கலாம். கலை, வடிவம், வரலாறு போன்ற செய்திகளில் நாம் எவ்வளவு ஆழ்ந்திருந்தபோதிலும், மேற்கூறிய கவிதையின் முதனிலைக் கூறுகள் எவ்விதத்திலும் நம் பார்வை வினின்று நழுவாமல் காக்க வேண்டும் : என்று அட்சன் கூறுவதை ஈண்டுச் சிந்தித்தல் வேண்டும். இதுபற்றியே கவிதையைப்பற்றிக் கூறவந்த தொல்காப்பியரும்,

இழுமென் மொழியால் விழுமியது நுவலல்’. என்று கூறிப்போனார். விழுமியதே கவிதையில் கூறப்பெறல் வேண்

டும் என்பது தமிழரின் சட்டம். தமிழ்க் கவிதைகள் பெரும்பாலும் அறங்கூறும் இயல்பும் கவிதை இயல்பும் கொண்டே திகழ்கின்றன.

43. Hudson, W. H.; An Introduction to the Study of Literature,

பக், 95. 44. செய்யு. நூற். 230 (இளம்).

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:பாரதீயம்.pdf/167&oldid=681192" இலிருந்து மீள்விக்கப்பட்டது