பக்கம்:பாரதீயம்.pdf/179

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

கவிதைகளில் காணும் சுவைகள் 16.3

நம்மிடத்தில் நகைப்பினை விளைவிக்கும். ஆடவன் ஒருவன் மகளிர் அணியும் சேலையை வேட்டிபோல் உடுத்திச் சென்றால் அவனைப் பார்ப்பவர்களின் உள்ளத்தில் ஒரு வேற்றுமைனர்ச்சி பிறக்கின்றது. இதனையே நாம் ஹாஸ்யம் என்ற மனோபாவமாய்க் கருதுகின் றோம். பள்ளிகள், கல்லூரிகளில் நடைபெறும் மாற்றுடைப்போட்டி யில் (Fancy dress competition) ogogloss of goal நிகழ்ச்சிகளைக் காணலாம், தெனாலிராமன் கதையில் பல நகைச் சுவை நிகழ்ச்சிகளைக் கண்டு களிக்கலாம். எனவே, ஹாஸ்யத்திற்கு. இதுதான் கரணம் என்று அறுதியிட்டுக் கூறுவது பிசகு.

அரசியல், சமூக இயல், குடும்ப இயல்-இவை பற்றி இதழ்களில் வெளியாகும் எண்ணற்ற துணுக்குகளும், கேலி (குறும்பு) ஒவியங் களும் நகைச்சுவையை எழுப்புகின்றதைக் கண்டு மகிழலாம். விலை வாசிகள் இராக்கெட்டு வேகத்தில் ஏறிக்கொண்டு போகின்றன. தொலைபேசியிலும் வானொலியிலும் விலைவாசிகள் இறங்குமுக மாக உள்ளன என்ற விளம்பரமும், விலைவாசிபற்றி அரசு தயாரித்து வெளியிடும் புள்ளி விவரங்களும் முன்னுக்குப் பின் முரணாகக் காணப்படுவதால் உம்மனா மூஞ்சுகளும் கூடச் சிரித்துவிடுகின் றார்கள்! இவை உலக வாழ்க்கையில் வருவதால் இலக்கண விதிப்படி, ரஸ்மாகாவிட்டாலும் நன்றாகப் பழகிப்போன இவை தொல்லையை விளைவிப்பதைவிட நகைப்பையே விளைவிக்கின்றன.

கண்ணன்- என் தாய் என்ற பாடலில்,

சாத்திரம் கோடிவைத்தாள்:- அவை

தம்மினும் உயர்ந்ததோர் ஞானம் வைத்தாள் மீத்திடும் பொழுதினிலே- நான் .

வேடிக்கை புறக்கண்டு நகைப்பதற்கே கோத்தபொய் வேதங்களும்- மதக்

கொலைகளும் அரசர்தம் கூத்துக்களும் மூத்தவர் பொய்ந்தடையும்- இள

மூடர்தம் கவலையும் அவள்பு னைந்தாள்: 8 பொய் வேதங்கள், மதக்கொலைகள், அரசர்தம் கூத்துகள் (அர சியல்வாதிகளின் நாடகங்கள்) மூத்தவர் பொய்ந்நடை இளமூடர் தம் கவலைகள்-இவை நடைமுறையில் இருப்பதைக் கண்டு ஒருவர் நகைக்காமலிருந்தால் அவர் சித்தம் தெளிய மருந்தொன்று கண் டறிய வேண்டியதுதான்!

அத்தினபுர வருணனையில் வரும் ஒரு பாடல்: மெய்த்தவர் பலருண்டாம்;- வெறும் . வேடங்கள் பூண்டவர் பலருண்டாம். உய்த்திடும் சிவஞானம்-கனிந்)

தோர்ந்திடும் மே ைவர் பலருண். டாம்:

16. கண்ணன்- என் தாய் - 9.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:பாரதீயம்.pdf/179&oldid=681205" இலிருந்து மீள்விக்கப்பட்டது