பக்கம்:பாரதீயம்.pdf/28

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

12 பாரதீயம்

என்று காதில் விழுந்த திசைமொழிகளெல்லாம் பெயர்கூடத் .ெ த ரிய மல் அழிவுற்றிறந்தன என்று தமிழின் இறவாத் தன்மையை - மார்க்கண்டேயத்தை - எடுத்துக்காட்டி மகிழ்வார். இந்த உலகத்தில் அமரவாழ்வு பெறவேண்டுமாயின் ‘தெள்ளுற்ற தமிழமுதின் சுவை காணுங்கள்; இன்பத்தேன் வேண்டுமென் தால் செந்தமிழ் நாடென்று செப்புங்கள்’ என்று மொழி மேலும் காட்டின்மேலும் வைத்து நல்லுரை பகர்வார். சேம முற வேண்டுமெனில் தெருவெல்லாம் தமிழ் முழக்கம் செய்ய வேண்டும்” என்பதே, இங்ஙனம் பகர்வதற்குக் காரணம் என்று கருதலாம். தமிழ்மொழியின் வளர்ச்சியைப்பற்றிய பாரதீயம் இது :

பிறநாட்டு நல்லறிஞர் சாத்திரங்கள்

தமிழ்மொழியில் பெயர்த்தல் வேண்டும் ; இறவாத புகழுடைய புதுநூல்கள்

தமிழ்மொழியில் இயற்றல் வேண்டும்.” பெண்ணுரிமை : பெண்ணுரிமை என்பது பாரதீயத்தின் உயிர் கிலையானது, இவ்வுரிமையைப் பாரதியார் பல்வேறு கோணங்களில் பேசுகின்றார். மக்கள் சமுதாயத்தில் ஆணும் பெண்ணும் இருகண் களையொத்தவர் என்பது கவிஞரின் கருத்து.

பெண்ணுக்கு ஞானத்தை வைத்தான் - புவி

பேணி வளர்த்திடும் ஈசன், மண்ணுக் குள்ளே சிலமூடர் - கல்ல மாத ரறிவைக் கெடுத்தார். கண்கள் இரண்டினில் ஒன்றைக் - குத்திக்

காட்சி கெடுத்திட லாமோ ? பெண்க ளறிவை வளர்த்தால் - வையம்

பேதைமை யற்றிடுங் காணிர்.” சமுதாயத்தில் பாதிப் பேரை அறிவுக் கேடராக்கினால் ஏனைய பாதி யும் இருளில் மூழ்கிவிடும் என்பது இவர்தம் அதிராத கம்பிக்கை, பிறிதோரிடத்தில்,

ஆணும் பெண்ணும் நிகரெனக் கொள்வதால்

அறிவி லோங்கிஇவ் வையம் தழைக்குமால்’ என்று இக்கருத்திற்கு அரண் அமைத்துக் காட்டுவர். மேலும், T3 இ.இ தமிழ்-3

38. . பச. முரசு -8, 9, 99. ைபுதுமைப் பெண் - 4.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:பாரதீயம்.pdf/28&oldid=681254" இலிருந்து மீள்விக்கப்பட்டது