பக்கம்:பாரதீயம்.pdf/48

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

32 பாரதீயம்

என்று ஒரு புதுக் கவிதையின் ஒரு பகுதி அமைகின்றது. உண்மை நிலையைக் கிண்டல் செய்யும் கவிதை இது : எள்ளல் குறிப்பு நம்மைச் சித்திக்க வைக்கின்றது.

பாரதியாரின் கல்வி பற்றிய சிந்தனைகள், வசன கவிதைகள், பழமையில் புதுமை காணும் பண்புகள், வாழ்க்கையில் தம்மை மறந்த நிலை என்பன போன்றவற்றிலும் இவர்தம் இலக்கியக் கொள்கையைக் காணலாம். இவற்றையெல்லாம் கருத்தில் கொண்டு இவர் பெருமையை மதிப்பிட்டால்,

புவியனைத்தும் போற்றிடவான் புகழ்படைத்துத்

தமிழ்மொழியைப் புகழி லேற்றும் கவியரசர் தமிழ்நாட்டுக் கில்லையெனும் வசையென்னாற் கழிந்த தன்றே.” என்று அவரே பெருமிதத்துடன் கூறிக்கொள்வது முக்காலும் உண்மை; வெறும் புகழ்ச்சி இல்லை என்பது தெளிவாகும். *தன்னைப் புகழ்தலும் தகும்புல வோர்க்கே’’ என்று பவணந்தி யாரும் இதற்கு விதி வகுத்துத் தக்துள்ளாரன்றோ ?

29. தனிப்பாடல்கள்-வேங்கடேச ரெட்-ப்ப பூபதி (2)-3 30. கன். நூற்.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:பாரதீயம்.pdf/48&oldid=681276" இலிருந்து மீள்விக்கப்பட்டது