பக்கம்:பாரதீயம்.pdf/67

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

கடவுள்- சமயக் கொள்கைகள் 5?

அந்தமொன் றில்லா ஆனந்தம் பெற்றேன்

பாதுt பெற்றதொன் றென்பால்: என்ற மணிவாசகப் பெருமானின் திருவாக்கையும் நினைவுகூரச் செய்துவிடுகின்றது.

இங்ஙனம் பல தெய்வங்களைப் பாடினாலும் எல்லாக் கடவுளர் களும் ஒரே பரம்பொருள் என்ற உணர்ச்சியை அடிநாதமாகக் கொண் டவர் என்பதற்கு அகச்சான்றுகள் உள்ளன. பாஞ்சாலி சபதத் தினுள் காப்பு பரப்பிரும்மத்தின் துதியாக அமைந்துவிடுகின்றது.

ஒமெனப் பெரியோர்கள் - என்றும்

ஒதுவ தாய்வினை மோதுவ தாப் திமைகள் மாய்ப்பது வாப் - துயர்

தேப்ப்பதுவாய் நலம்வாய்ப் பதுவாப் காமமும் உருவமும் அற்றே - மனம்

காடரி தாய்ப்புத்தி தேடரிதாப் ஆமெனும் பொருளனைத்தாப் - வெறும்

அறிவுடன் ஆனந்த இயல்புடைத்தாப்: நின்றிடும் பிரும்மம் என்பார்; அந்த*

நிர்மலப் பொருளை நினைந்திடுவேன். என்பது பிரும்மத்தைப்பற்றிய பாடல். ‘வடமொழியில் ஒம்: என்னும் சொல்லுக்கு ஆம்’ என்றே பொருள். எவ்விடத்தும் இல்லை யாதலின்றி ஆம் என இருத்தல் பற்றியே, வேதம்பிரும் மத்திற்கு ஒம் எனும் பெயர் கொடுக்கப்பட்டிருப்பதறிக” என்ற பாரதியாரின் குறிப்பு பிரும்மத்தை நன்கு விளக்குகின்றது. இன்னும் புதிய ஆத்திசூடி” என்ற பகுதியின் காப்பும் பரம்பொருள் வாழ்த் தாகவே அமைகின்றது.

ஆத்திச் சூடி இளம்பிறை யணிந்து மோனத் திருக்கு முழுலெண் மேனியான் கடுகிறங் கொண்டுபாற் கடல்மிசைக் கிடப்போன் மகமது கபிக்கு மறையருள் புரிந்தோன் ஏகவின் தந்தை யெனப்பல மதத்தின் சி. உருவகத் தாலே உணர்ந்துன ராது. பலவகையாகப் பரவிடும் பரம்பொருள் ஒன்றே. அதனியல் ஒளியுறு மறிவாம்: அதனிலை கண்டார் அல்லலை அகற்றினார். அதனருள் வாழ்த்த அமரவாழ் வெய்துவோம்.” 67. திருவாசகம்-கோயிற்றிருப்பதிகம் -10 88. பாச. 1. 1 , 1 (பிரும்மதுதி) 69. புதிய ஆத்திசூடி - காப்பு.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:பாரதீயம்.pdf/67&oldid=681297" இலிருந்து மீள்விக்கப்பட்டது