பக்கம்:பாரதீயம்.pdf/94

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

78 பாரதீயம்

மற்றொரு பக்கம் கலை நிகழ்ச்சிகள் நடைபெறுகின்றன

கல்லிசை முழக்கங்கள் காலா பக்கங்களிலும் கேட்கின்றன. நடன

மாதர்கள் காட்டிய விருந்தளிக்கின்றனர். காவிய ஆராய்ச்சி நிகழ் கின்றது. சிற்பங்கள், ஒவியங்கள் இவற்றின் கண்காட்சிகள் நடை பெறுகின்றன. இவற்றையெல்லாம் கண்டு களிக்கும் மக்கள் கூட்டத்தை எம்மருங்கும் காணலாம். இவையெல்லாம் அரசர் வீதி களில் நடைபெறுவதாகக் குறிப்பிடுகின்றார் கவிஞர். இப்பக்கம் யானைப் படைகள், குதிரைப் படைகள், தேர்ப்படைகள்-இவற்றின் வரிசைகளையும் காணலாம்.

வணிகர் விதிகளில் பல்வேறு பண்டங்களின் வரிசைகளைக் காணலாம். எண்னரும் கனி வகைகள், மணப் பொருள்வகைகள், பூமாலை வகைகள், சுண்ன வகைகள், கறும்புகை யூட்டும் பொருள்கள், பல்வேறு நுகர்பொருள்கள் இவற்றின் திரள்களை இங்குக் காணலாம். குபேர சம்பத்துகள் நிறைந்திருந்தன இந்த வீதிகளில். இங்குத் திருடர் பயம் இல்லை என்ற குறிப்பையும் தரு கின்றார் கவிஞர்”. இங்ங ைம் அரச வீதி, அந்தணர் வீதி, வணிகர் வீதி, மறவர் வீதி என்று வருணித்திருப்பது பழைய முறையை ஒட்டியதாகும்.

கருப்பொருள் மாட்சி : திருமபுத்திரன் இராசசூயப் பெரு வேள்வி செய்தபோது ஆயிரக்கணக்கான முடிவேந்தர்களும் பல்லாயிரக்கணக்கான குறுநில மன்னர்களும் பல்வேறு வகைப் பரிசுப் பொருள்களை கல்கினர். அப்பொருள்களை நிரல்படத் தொகுத்து இயற்கைப் புனைவு என்று கருதும்படி அற்புதமாக அமைத்துள்ளார்.’’ மலைவளம் காணச் சென்ற செங்குட்டுவன் தன் அரசமாதேவியுடன் சென்றபொழுது திறை சுமந்து நிற்கும் தெவ்வபோல மலைவாழ் குறவர்கள் பல்வேறு வகைப் பரிசுப் பொருள்களை நல்கினர் என்று இளங்கோவடிகள் கூறும் பகுதியை’’ அடியொட்டி இப்பகுதியைப் பசாதியார் அழகுற அமைத்துள்ளார் என்று கருதத் தோன்றுகிறது.

நெப்தல் நில மக்கள் முத்து, சிப்பி, பவளங்கள், வெண் சங்கின் குவியல்கள், ஒப்பில்லாத வைடுரியம் முதலிய பொருள் களைக் கொண்டுவந்ததாகக் காட்டுவர். மலை நாட்டு மக்கள் கொணர்ந்தவற்றை, , -

33. டிை 13 7-14. 34. தை 1.5 : 22-37 35. சிலப் 3.25 36-54, .

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:பாரதீயம்.pdf/94&oldid=681329" இலிருந்து மீள்விக்கப்பட்டது