பக்கம்:பாரத பண்பாட்டு தளத்தில் பாரதி.pdf/102

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

"பாரதப்பண்பாட்டுதளத்தில் பாரதி அ.சீனிவாசன் 94 எழுப்ப, பாரத மாதா திருப் பள்ளியெழுச்சியைப் பாடினார். அப்பாடல்களில் புதிய கருத்துக்களையும் முன்வைத்தார். "சுருதிகள் பயந்தனை, சாத்திரங்கோடி சொல்லருமாண்பின ஈன்றனையம்மே! என்றும் "விதமுறு நின்மொழி பதினெட்டும் கூறி வேண்டியவாறுனைப் பாடுதும் காணாய் என்றும் குறிப்பிட்டு, நாட்டின் பெருமையையும் ஒறுமைப்பாட்டையும் வெளிப்படுத்திப் பாடுகிறார். தமிழ்நாடு பற்றிய பாடல்களில் பாரதி தமிழ்நாட்டின் தனிச்சிறப்புகளைப் பற்றியும் வளத்தைப் பற்றியும் சேர சோழ, பாண்டிய மன்னர்களின் சிறப்பான ஆட்சிமுறைகளைப் பற்றியும் கம்பன், வள்ளுவன், இளங்கோவடிகளின் தனிச்சிறப்புகளைப் பற்றியும் பெருமைப் படுத்திப்பாடுகிறார். "செந்தமிழ் நாடெனும் போதினிலே - இன்பத் தேன்வந்து பாயுது காதினிலே" என்று பாரதி துள்ளிக் குதித்துப் பாடத் தொடங்குகிறார். "வேதம் நிறைந்த தமிழ்நாடு" என்றும் "உயர்வீரம் செரிந்த தமிழ்நாடு" என்றும் "காவிரி, தென்பண்ணை, பாலாறு - தமிழ் கண்டதோர் வைகை பொருனைநதி - யென மேவிய ஆறுபல வோட - திரு மேனி செழித்த தமிழ் நாடு' என்றும் நாட்டுவளத்தையும் சிறப்பையும் குறித்துப் பாடுகிறார். தமிழ் கண்ட வை கையும் பொரு ைன யு ம் என்பது தனிச்சிறப்பாகும். வைகையும் பொருனையும் நாட்டை மட்டும் வளப்படுத்வில்லை. தமிழ்சங்கம் வளர்த்த மதுரையும் தமிழின்பம் வளர்த்த பொதிகையும் வைகை, பொருனை நதிகளுடன் இணைந்து பெருமை கொண்டதாகும். இன்னும் செல்வம் எத்தனையுண்டு புவிமீதே, அவையாவும் படைத்த தமிழ்நாடு என்று தமிழ்நாட்டின் செல்வ வளத்தை உச்சத்தில் வைத்து பாரதி பாடுகிறார்.