பக்கம்:பாரத பண்பாட்டு தளத்தில் பாரதி.pdf/103

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

'பாரதப்பண்பாட்டு தளத்தில் பாரதி அ.சீனிவாசன் 95 கல்வி சிறந்த தமிழ்நாடு - புகழ்க் கம்பன் பிறந்த தமிழ்நாடு என்றும் வள்ளுவன்தன்னை உலகினுக்கே - தந்து வான்புகழ் கொண்டதமிழ்நாடு - நெஞ்சை அள்ளும் சிலப்பதிகாரமென்றோர் மணி ஆரம்படைத்த தமிழ்நாடு என்றும் தமிழ்நாட்டின் கல்விச் சிறப்பையும் அறிவுச் சிறப்பையும் புகழ்ந்து பாடுகிறார். தமிழ்த் தாய் தனது மக்களைப் புதிய சாத்திரங்களைப் படைக்குமாறு கூறுவதாக பாரதி பாடியுள்ள பாடல் தமிழ்நாட்டு மக்களுக்கு புதிய கடமைகளை நிறைவேற்ற ஆணை பிறப்பித்ததைப் போல அமைந்துள்ளது. தமிழ் நாட்டின் வரலாற்றுச் சிறப்பை எடுத்துக் காட்டி பாரதி தனது காலத்திய அவல நிலையைக் கவலையுடன் சுட்டிக்காட்டி எதிர்காலதில் உயர்வடைய ஆற்றவேண்டிய கடமைகளை எடுத்துக் காட்டுகிறார். "ஆதிசிவன் பெற்று விட்டான் - என்னை ஆரியமைந்தன் அகத்தியன் என்றோர். "வேதியன் கண்டு மகிழ்ந்தே - நின்ற மேவும் இலக்கணம் செய்து கொடுத்தான் மூன்று குலத்தமிழ் மன்னர் - என்னை மூண்டநல்ல அன்பொடுநித்தம் வளர்த்தார் ஆன்ற மொழிகளில் உள்ளே - உயர் ஆரியத்திறற்கு நிகர் என வாழ்ந்தேன், என்று தமிழின் வரலாற்றுச் சிறப்பை எடுத்துக்காட்டிக் கவிதையைத் தொடங்குகிறார். "சாத்திரங்கள் பலதந்தார் - இந்த தரணியெங்கும்புகழ்ந்திட வாழ்ந்தேன். என்று பண்டயச் சிறப்பையும்சுட்டிக் காட்டி "தந்தை அருள் வலியாலும் - முன்பு சான்ற புலவர் தவ வலியாலும் இந்தக் கணமட்டும் காலன் - என்னை ஏறிட்டுப் பார்க்கவும் அஞ்சியிருந்தான்.