பக்கம்:பாரத பண்பாட்டு தளத்தில் பாரதி.pdf/109

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

"பாரதப்பண்பாட்டு தளத்தில் பாரதி அ.சீனிவாசன் | 0 | இன்றய இந்திய உயர்கல்வியில் இயற்பியல், வேதியில், வானவியல், விலங்கியல், தாவரவியல், உயிரியல், பொறியியல், வைத்தியம், கணிதம் முதலிய மற்றும் இதர அறிவியல் துறைகள், மற்றும் இலக்கியம் வரலாறு பொருளியல், வணிகவியல், சட்டவியல், வாணிபம், தத்துவ ஞானம், கட்டிடவியல் முதலிய பலவேறு துறைகளும் இந்திய மண்ணில் வேர்விட்டுத் தொடங்கி, இந்திய வரலாற்று அனுபவத்தில் இணைந்து உருப்பெற்றுவளர்ச்சி பெற்று, உலக அறிவையும்சேகரித்து இணைத்துக் கொண்டு, நமது நாட்டின் தற்கால, எதிர்கால தேவைகளை முழுமைப்படுத்திக் கொள்ளும் வகையில் அமைவதே சீரான கல்வியாக அமையும் என்பதை வலியுறுத்திக்காட்டுகிறது. பல துறைகளிலும் பாரத நாட்டில் அறிவுத்துறையை வளர்த்து, அதன் உச்சிக்குச் சென்றுள்ள பல அறிஞர்கள், பேரறிஞர்கள், தனிச்சிறப்பு மிக்க ஞானிகள், மேலோர்கள் வீரர்கள், அரசர்கள், மேதைகள், முதலியவர்களைக் குறிப்பிட்டு அவர்களின் அறிவுத்துறை சாதனைகளை நாட்டின் பொது அறிவுத்துயிைன் வளர்ச்சிக்கு வளப்படுத்திப் பயன்படுத்த வே ண் டி ய த ன் அ வ சி ய த் ைத ப ா ர தி யி ன் க வி ைத க ளு ம் கவிதைக்கருத்துக்களும் தெளிவுபடக் கூறுவதைக் காணலாம். அந்தப் பண்பாட்டின் பாரம்பரியத்தில் பாரதி தன்னைத் தெளிவாக அடையாளம் காட்டிக் கொள்கிறார். பாரதி தனது சுய சரிதைத் தொகுப்பைத் தொடங்கும் போது பட்டினத்துப் பிள்ளையின் பொய்யாய்ப் பழங்கதையாய்க் கனவாய் மெல்லப்போனதுவே என்னும் தத்துவ ஞானவாசகத்துடன் தொடங்குகிறார். பாரதி அறுபத்தாறு என்னும் கவிதைத் தொகுப்பைத் தொடங்கும் போது, எனக்கு முன்னே சித்தர் பலர் இருந்தாராப்பா o யானும் வந்தேன் ஒரு சித்தன் இந்த நாட்டில் 38% என்று தொடங்குகிறார். o - a. சிவாஜியும் குருகோவிந்தரும் * - * `. - -

    • . ...” வரலாற்றுப் பாரம்பரியத்தில் வந்த மாவீரர்களையும் சிறந்த சிந்தனையாளர்களையும்.அறிவுத்துறைச் செல்வர்களையும் பற்றிப் பாடும் பாரதி, மராட்டியவிரன் சிவாஜி தனது போர்ப்படையினருக்கு விடுத்த வேண்டு கோளைப் பற்றியும் குரு கோவிந்த சிம்மர் தனது சீடர்களுக்கு விடுத்த அறிவுரைகளையும் பற்றித் தனது பாடல்களில் தனித்தனிக் கவிதைகளாகத் தொகுத்துக் கூறியுள்ளார்.