பக்கம்:பாரத பண்பாட்டு தளத்தில் பாரதி.pdf/110

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

'பாரதப்பண்பாட்டு தளத்தில் பாரதி அ.சீனிவாசன் I O2 டில்லி மாநகரைத்தலைமையாகக் கொண்டு இந்திய நாட்டை, ஆங்கிலேயருக்கு முன் ஆண்ட மொகலாயப் பேரரசின் சக்திவாய்ந்தக் கடைசிப் பேரரசனாக, சக்கரவர்த்தியாக ஒளரங்கசீப் கருதப்படுகிறான். ஒளரங்கசீப்பின் ஆட்சிகாலத்தில் மொகலாய மன்னராட்சி முறை அதன் உச்ச நிலையில் இருந்தது எனக்கூறலாம். ஒளரங்கசீப் ஆட்சி காலத்தில், டில்லி சாம்ராஜ்ய ஆதிக்கத்திற்கு எதிராக, இ ந் தி ய ா வி ன் பல பகு தி க ளி லு ம் , ம ன் ன ரா ட் சி முறைக்கொடுமைகளுக்கெதிரான மக்களுடைய கலவரங்களும் எழுந்தன. இவைகளில் முக்கியமானது தெற்கில் மராட்டியருடைய எழுச்சி யும் , மேற் கி ல் பாஞ் சா லத்தில் சீக்கியர்களுடைய பேரெழுச்சியுமாகும். இவ்விரண்டையும் எடுத்துக் காட்டும் முறையில் பாரதி முறையே சிவாஜியைப் பற்றியும் குருகோவிந்தரைப் பற்றியும் தனது சிறப்புமிக்க தனிக்கவிதைகளில் பேசுகிறார். சத்திரபதி சிவாஜி தனது படைவீரர்களிடம் பேசுவதை, பாரதி குறிப்பிடுகிறார். "சேனைத்தலைவர்காள் சிறந்த மந்திரிகாள் யானைத்தலைவரும் அருந்திரல் வீரர்காள் "அதிரத மன்னர்காள்துரகதத்ததிபர்காள் எதிரிகள் துணிக்குற இடித்திடுபதாதிகாள் வேலெறிபடைகாள் சூலெறிமறவர்காள் காலன் உருக்கொளும் கணைதுரந்திடுவீர் மற்றும் ஆயிரம் விதம் பற்றலர்தம்மைச் செற்றடுந்திறனுடைத் தீரரத்தினங்காள் யாவிரும் வாழியே, யாவிரும் வாழியே" என்று அனைவரையும் அழைத்து முதலில் தாய் நாட்டின் பெருமையைப் பற்றி எடுத்துக் கூறுகிறார். "மாற்றலர்தம்புலை நாற்றமேயறியா ஆற்றல் கொண்டிருந்ததிவ்வரும் புகழ்நாடு என்று கூறுகிறார். வேத நூல் பழிக்கும் வெளித்திசைமிலேச்சர் பாதமும் பொருப்பளோபாரத தேவி என்று கூறுகிறார்.