பக்கம்:பாரத பண்பாட்டு தளத்தில் பாரதி.pdf/112

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

*பாரதப்பண்பாட்டு தளத்தில் பாரதி அ.சீனிவாசன் 104 ஞானப் பெருங்கடல், நல்லிசைக் கவிஞன் வானம் விழ்ந்து திரினும்வாள்கொடுதடுக்கும் விரர்நாயகன் மேதினிகாத்த குருகோவிந்த சிங்கமாங்கோமகன் சீக்கியர் பெருமக்களைக் கொண்ட பெரும் கூட்டத்தைத் திரட்டி காலசா அமைப்பை உருவாக்கி, கொள்கை அறிக்கைவிடுத்தான். குரு கோவிந்தர் தலைமையில் அவர்களுடைய சீடர்கள் திரண்டு காலசா அமைப்பின் மூலம் அந்தத் தீர்மானத்தை நிறைவேற்றினர். சீடர்கள்.அனைவரும் திட்சையி..தடைந்தனர் ஐயன் சொல்வான்.அன்பர்காள் நீவிர் செய்திடப் பெற்ற திட்சையின் நாமம் அமிர்த மென்றறிமின் அரும்பேராமிது பெற்றார்யாவரும் பேரருள் பெற்றார் நுமக்கினித்தரும நுவன்றிடக் கேண்மின் என்று தொடங்கித்தங்கள் கொள்கைப் பிரத-னத்தைச் செய்தார். ஒன்றாம் கடவுள் உலகிடைத்தோன்றிய மானிடர் எல்லாம் சோதரர் மானுடர் சமத்துவமுடையார் சுதந்திரம் சார்ந்தவர் சீடர்காள் குலத்தினும் செயலினும் அனைத்தினும் இக்கணந்தொட்டு நீர் யாவருமொன்றே பிரிவுகள் துடைப்பிர் பிரிதலே சாதல் ஆரியர் சாதியுள்ஆயிரஞ்சாதி வகுப்பவர் வகுத்து மாய்க நீரனை விருந் தருமம் கடவுள் சத்தியம் சுதந்திரம் என்பவை போற்ற எழுந்திடும் வீரச் சாதி யொன்றனையே சார்ந்தோராவிர் அநீதியும் கொடுமையும் அழிந்திடும் சாதி மழித்திடல் அறியா வன்முகசாதி இரும்பு முதிரையும்இறுகிய கச்சையும் கையினில் வாளும் கழன்றிடாச்சாதி சோதர நட்புத் தொடர்ந்திடு சாதி அரசனில்லாது தெய்வமேயரசா மானுடர் துணை வரா மறமேபகையாக் குடியரசியற்றும் கொள்கையார் சாதி அறத்தினை வெறுக்கிலீர் மறத்தினை பொறுக்கிலிர் தாய்த்திரு நாட்டைச் சந்ததம் போற்றிப் புகழொடு வாழ்மின் புகழொடு வாழ்மின் என்றுரைத்து ஐயன் இன்புற வாழ்த்தினன் அவனடிபோற்றியார்த்தனர் சீடர்கள் குருகோவிந்தக் கோமகனாட்டிய கொடியுயர்ந்தசையக் குவலயம் புகழ்ந்த ஆடியே மாய்ந்ததவுரங்கசீப் ஆட்சி என்று பாரதி తాnp) முடிக்கிறார்.