பக்கம்:பாரத பண்பாட்டு தளத்தில் பாரதி.pdf/121

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

"பாரதப்பண்பாட்டு தளத்தில் பாரதி அ.சீனிவாசன் 113 "விடும் உறவும் வெறுத்தாலும் என்னருமை நாடு பிரிந்த நலிவினுக்கென் செய்கேனே" என்று தொடங்கி பாஞ்சாலத்திரு நாட்டின் ஒப்பிலாத பெருமையை பாரதி விளக்கிக் கூறுகிறார். "ஆதிமறை தோன்றிய நல்லாரிய நாடு எந்நாளும் நீதி மறைவின்றி நிலைத்ததிருநாடு சிந்து வெனும் செய்தவத்திரு நதியும் மற்றதிற்சேர் ஐந்து மணியாறும் அளிக்கும் புனல்நாடு ஐம்புலனை வென்ற எண்ணில் வீரருக்கும் தாய் நாடு நல்லறத்தை நாட்டுதற்கு நம்பெருமான் கெளரவராம் புல்லரைச் செற்றாழ்த்த புனிதப் பெருநாடு கன்னானுந்திண்டோள் களவிரன் பார்த்தன் ஒரு வின்னானொலி கேட்டமேன்மைத்திருநாடு கன்னனிருந்த கருணை நிலம் தர்மனெனு மன்னனறங்கள் வளர்த்த புகழ்நாடு ஆரியதர்தம் தர்ம நிலை ஆதரிப்பான்விட்டு மனார் நாரியர்தம் காதல் துறந்திருந்த நன்னாடு வீமன் வளர்த்த விறனாடு வில்லசுவத் தாமணிருந்து சமர்புரிந்த வீரநிலம் சீக்கர் எனும் எங்கள் விறற்சிங்கங்கள் வாழ்தருநல் ஆக்கமுயர் குன்ற மடர்ந்திருக்கும் பொன்னாடு ஆரியர் பாழாகாது அருமறையின் உண்மை தந்த சீரியர் மெய்ஞ்ஞான தயாநந்தர் திருநாடு என்னருமைப் பாஞ்சாலம் என்றேனும் காண்பேனோ? பன்னரியதுன்பம் படர்ந்திங்கு மாய்வேனோ? என்றும், எத்தனை ஜன்மங்கள் இருட்சிறையில் இட்டாலும் தத்து புனல் பாஞ்சாலம் தனில் வைத்தால் வாடுகிலேன் என்றும் லஜபதியின் பிரலாபத்தை இனிய இலக்கியத்தமிழில் பாரதி பாடியுள்ளது நமது உள்ளத்தை உலுக்கிவிடுகிறது. வ.உ.சிதம்பரம் பிள்ளை இருபதாம் நூற்றாண்டின் தொடக்கத்தில் பாரத நாட்டின் தென்கோடி ப்பகுதியில் விடுதலைப் போராட்டத்தின் பேரலை வீசியது. தூத்துக்குடியில் தொழிலாளர் வேலைநிறுத்தம். அன்னியத்துணி நிராகரிப்பு சுதேசி இயக்கத்தின் இடியும் குமுரலும் தென்பாண்டிய மண்ணைக் குலுக்கியது. அன்னிய ஆட்சியின் தடையுத்தரவுகள் அடக்கு முறைக் கொடுமைகள்