பக்கம்:பாரத பண்பாட்டு தளத்தில் பாரதி.pdf/124

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

*பாரதப்பண்பாட்டு தளத்தில் பாரதி அ.சீனிவாசன் 116 7. சதையைத் துண்டு துண்டாக்கினும் உன்னெண்ணம் சாயுமோ? ஜீவன் - ஒயுமோ? இதயத்துள்ளே இலங்கு மகாபக்தி யேகுமோ? - நெஞ்சம் - வேகுமோ? என்று பாடுகிறார். இந்தப் பாடல்கள் தனிச்சிறப்பு மிக்க பாடல்களாகும். அக்காலத்திய தேசபக்தர்களின் மன உணர்வையும் தேசபக்த வேகத்தையும் எடுத்துக் காட்டுகிறது. பாரதி இன்னும் தேசபக்தச் செம்மல் வ.உ.சிரம்பரம் பிள்ளை அவர்களை நினைத்து மேலும் சில பாடல்களைப் பாடியுள்ளார். "என்று தணியுமிந்த சுதந்திர தாகம்? என்று மடியுமெங்கள் அடிமையில் மோகம்? என்றெமதன்னையின் விலங்குகள் போகும்? என்றெமதின்னல்கள் தீர்ந்து பொய்யாகும்? அன்றொருபாரதம் ஆக்க வந்தோனே ஆரியர் வாழ்வினை ஆதரிப்போனே வென்றிதரும் துணை நின்னருளன்றோ? மெய்யடியோம் இனும் வாடுதல் நன்றோ? என்றும் இதந்தருமனையினிங்கி இடர்மிகு சிறைப்பட்டாலும் பதந்தருவிரண்டு மாறிப் பழிமிகுந்திழிவுற்றாலும் விதந்தரு கோடியின்னல் விளைந்தெனையழித்திட்டாலும் சுதந்திர தேவி நின்னை தொழுதிடல் மறக்கிலேனே என்றெல்லாம் தேசபக்தர் சிதம்பரம் பிள்ளை, சுப்பிரமணியசிவா நினைவாக பாரதி நெஞ்சுருகப் பாடுகிறார். வ.உசிதம்பரம்பிள்ளை சுப்பிரமணியசிவா ஆகியோருடன் நேரடியாக அறிமுகமாகித் தொடர்பு கொண்டிருந்த பாரதி சிதம்பரம் பிள்ளை சிறையிலடைக்கப்பட்ட போது எழுதிய பாடல். "வேளாளன் சிறை புகுந்தான் தமிழகத்தார் மன்னனென மீண்டான் என்றே கேளாத கதை விரைவிற்கேட்பாய் நீ வருந்தலை என் கேண்மைக்கோவே தாளாண்மை சிறிது கொலோயாம் புரிவோம் நீ இறைக்குத் தவங்கள் ஆற்றி