பக்கம்:பாரத பண்பாட்டு தளத்தில் பாரதி.pdf/129

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

"பாரதப்பண்பாட்டு தளத்தில் பாரதி அ.சீனிவாசன் 12] 5. பாரதியின் புது தெறி போரதத்தின் பண்பாட்டு தளத்தில் நின்று பாரதி தனது கவிதைகளை, கதைகளைக் கட்டுரைகளை, எழுதி புதுநெறி காட்டியுள்ளார். நமது வேதங்கள், உபநிடதங்கள், இதிகாசங்கள், புராணங்கள், கதைகள், தமிழகத்தில் கம்பன், வள்ளுவன், இளங்கோ, சங்க காலப்புலவர்கள் சான்றோர், சமணச் சான்றோர், ஆழ்வார்கள், நாயன் மார்கள், சமயக் குரவர்கள், சித்தர்கள், தாயுமானவர், அருணகிரியார், வள்ளலார், முதலியோர்களின் கருத்துக்கள், காவியங்கள், கவிதைகள் ஆகியவற்றின் வழிவழியாக வந்த மாபெரும் கவிஞனாக பாரதி தமிழ்நாட்டில் தோன்றி தமிழ்நாட்டிற்கும் தமிழ் மொழிக்கும், தமிழ்ப் பண்பாட்டிற்கும் பாரதப் பண்பாட்டிற்கும், தமிழகத்தின், பாரதத்தின் உலகின் எதிர்காலத்திற்கும் வழி காட்டியாக நிற்கிறார்) பாரதி காட்டியுள்ள புதுநெறி சிலவற்றை இந்நூலின் நிறைவுரையாக நாம் நினைவில் கொண்டு நமது செயலாக்கத்திற்கும் செயலூக்கததிற்கும், வழிக் காட்டியாகக் கொள்ளலாம். பாரதியின் குரலோசைப்படி அச்சம் திரவேண்டும், அமுதம் விளைய வேண்டும், வித்தை வளர வேண்டும். வேள்வி, முயற்சிகள், ஒங்க வேண்டும். நாம் அனைவரும் இங்கு இவ்வுலகில் அமரத்தன்மை பெறலாம். மனதில் சலனம் இல்லாமல் உறுதி ஏற்படவேண்டும் மதியில் இருள் படராமல் ஒளி ஓங்கச் செய்ய வேண்டும். அனைவரும் அனைத்து செல்வங்களும் பெற்று நூறுவயதுவரை நீண்ட ஆயுளுடன் இருக்க வேண்டும். இவையெல்லாம் தானாக வராது. அதற்கான முயற்சிகள், செயல், ஒருமுகப்படுத்தி மனதையும் செயலையும் ஈடுபடுத்துதல்,அதன் மூலம் ஞானமும் நல்லறிவு பெறுதலும் வேண்டும். அப்போது முக்திவிடுதலை பெறலாம். இந்த உலகிலேயே அந்த விடுதலையைப் பெறலாம். கடமை என்பது என்ன? தன்னைக்கட்டுதல், பிறர் துயர்திர்த்தல், பிறர் நலம் வேண்டுதல் ஆகும். இதில் தனிமனித உரிமையும் மனித சமுதாய உரிமையும் அடங்கியிருக்கிறது. திடமான மன உறுதியும் அர்ப்பணிப்பும் அதற்கு அவசியமாகிறது. கடமைகளைச் சரியாக, சீராக, செம்மை யாக நிறைவேற்ற முயலும்போது அதன் பயன்கள் நான்கு அவை அறம், பொருள், இன்பம், வீடு ஆகிய நான்குமாகும். இதை வடமொழியில் தர்மம், அர்த்தம், காமம், மோட்சம்