பக்கம்:பாரத பண்பாட்டு தளத்தில் பாரதி.pdf/13

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

5

  • பாரதப்பண்பாட்டு தளத்தில் பாரதி அ.சீனிவாசன்

கண்முன்னே காட்சியாக வருகிறது. வீட்டுமனும் துரோணனும் கர்ணனும் விதுரனும் வேறுபல சபையோரும் இருந்த திருதராட்டிரன் சபைக்கு இழுத்து வரப்பட்ட பாஞ்சாலியை நீதி கேட்டு வாதாடியதை பெண்ணுரிமை கேட்டு வாதாடும் புதுமைப் பெண்ணாகவே பாரதி கருதினார். பாரதியின் பல வகை பரிமாணங்களையும் மேலும் மேலும் அதிகமாக நாம் கண்ட ரிய முயல்வதன் மூலம் பாரத நாட்டின் பண்பாட்டுதளத்தின் விரிவையும், கனத்தையும், பரப்பையும் உயர்வையும் அறிந்து கொள்ளவும் புரிந்து கொள்ளவும் சாத்தியமாகிறது.