பக்கம்:பாரத பண்பாட்டு தளத்தில் பாரதி.pdf/130

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

“பாரதப்பண்பாட்டு தளத்தில் பாரதி அ.சீனிவாசன் 122 ஆகிய நான்கு புருஷார்த்தங்களாகக் கூறப்பட்டிருக்கின்றன என்பதை ஏற்கனவே முதலாவது அத்தியாயத்தில் பார்த்தோம். இந்த அறம், பொருள், இன்பம், வீடு என்னும் சொற்களுக்கான, பாரதியின் கருத்தும் விவுக்கமும், முற்றிலும் புதுமையாக இருக்கின்றன. சாதாரண விளக்கங்களிலிருந்து வேறுபட்டதாக இருப்பதைக் காண்கிறோம். அறம், பொருள், இன்பம், வீடு என்னும் பயன்பாடுகளுக்கு நீதி வகுத்த சுக்கிரன், வியாழன், வசிட்டன், வாமதேவர், வியாசர், விதுரர், வால்மீகி, மனு, பொருள் சாத்திரம் வகுத்த கெளடில்யர், மற்றும் தென்மொழியில் இப்புருஷார்த்தங்களை வகுத்த, வள்ளுவன், கம்பன், இளங்கோவும், இலக்கணம் பாடிய அகத்தியன், தொல்காப்பியன். சமணச் சான்றோர் முதலியோரும் மற்றவர்களும் கூறிய, சீரிய சிறந்தகருத்துக்கள் எல்லாம் புதிய காலதிற்கேற்ப மாற்றங்களும் வாளர்ச்சியும் பெற்று பாரதி காலத்தில் காலத்திற்கேற்றவாறு புதிய பரிமாணங்களைப் பெற்றிருக்கின்றன. அதை பாரதி தனக்கே உரிய தனித்தன்மையுடன் எடுத்து விளக்கியுள்ளார். அறம் என்பது, தனிமனிதன் மற்றும் சமுதாயத்தின் தன்னிலை, முன்னிலை புற நிலை அகநிலை உறவுகளின் பால் உள்ள கடமைகள் அனைத்தும் அடங்கும். பெற்றோருக்கும் பிள்ளைகளுக்கும் கணவனுக்கும் மனைவிக்கும், தனிமனிதனுக்கும் தனிமனிதனுக்கும், ஆசிரியனுக்கும் மாணாக்கனுக்கும், தனிமனிதனுக்கும் சமுதாயத்திற்கும் இடையில் உள்ள அவர்களின் பாஸ்பர உறவுகளின் பாலுள்ள கடமைகள், தனிமனித தேவைகளுக்கும் சமுதாயத்தின் தேவைகளுக்கு மான சாதனங்கள், கருவிகள், பொருள்கள் அனைத்தையும் படைக்கவும் பாதுகாக்கவும் வகுக்கவுமான பணிகளில் ஈடுபட்டுள்ள மனித உறவுகளின் பால் உள்ள கடமைகள் முதலியனவும், அரசு, அமைச்சு, படை, குடி மற்றும் சமுதாயத்தின் மேல்க் கட்டுமானங்கள், அனைத்துத் துறைகளிலும் தொடர்புகள், சம்மந்தப்பட்ட த ரிை ம னி த ர் கள் ம னி த க் கு மு க் கள் , ம னி த க் கூ ட் டங்க ள் , ஆகியோர்களுக்கிடையிலான உறவுகளின் பால் உள்ள கடமைகள் முதலியன அனைத்தும் அடங்குவதாகும். இரண்டாவதாக பொருள் என்னும்கருத்துவடிவமும் இன்று மிகவும் விரிவான பொருளடக்கத்தைக் கொண்டிருக்கிறது. தத்துவ ஞானப் பொருள் என்பது பிரபஞ்சத்திலுள்ள சகலவிதமான சேதன, அசேதனப்பொருள்கள் அனைத்தும் அடங்கும். ஆனால் இங்கு நமது சாத்திரங்களில் கூறப்படும் அர்த்தம் என்னும் பொருள், மனித சமுதாயத்தில் இல்லாமையும் கல்லாமையும் நீங்கி தனிமனிதனும் குடும்பமும், சமுதாயமும், உயிர்ப்பொருள் அனைத்தும்,