பக்கம்:பாரத பண்பாட்டு தளத்தில் பாரதி.pdf/141

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

1. o "பாரதப்பண்பாட்டு தளத்தில் பாரதி அ.சீனிவாசன் I 33 தொல்லை தீர்ந்து யர்வு கல்வி - வெற்றி சூழும் வீரம் அறிவு ஆண்மை, "கூடும் திரவியத்தின் குவைகள் - திறல் கொள்ளும் கோடி வகைத் தொழில்கள் - இவை நாடும் படிக்கு வினை செய்து - இந்த நாட்டோர் கீர்த்தியெங்கும்.ஒங்கக் - கலி சாடும் திறன் எனக்குத் தருவாய் - அடி தாயே உனக்கரிய துண்டோ - மதி மூடும் பொய் மையிருள் எல்லாம் - என்னை முற்றும் விட்டகல வேண்டும்" என்று காளியை வரம் கேட்பதாகச் சொல்லி தொழில்கள் மூலம் தொழில் உழைப்பின் மூலம் மந்திரச் சக்தி போன்று நாட்டையே மாற்றியமைக்க கவிஞன் பாணியில் கூறுகிறார் பாரதி. வஞ்சனை. சூது பகை இன்றி வையத்து மாந்தர் எல்லாம், வாழவேண்டும் என்பது பாரதியின் அரசியல் மற்றும் சமுதாய நெறியாகும். "நாட்டுமக்கள் பிணியும் வறுமையும் நையப்பாடு என்று ஒரு தெய்வம் கூறுமே, கூட்டி மானிட ஜாதியை ஒன்ற்ெனக் கொண்டு, வைய முழுதும் பயனுற பாட்டிலே அறம் காட்டவேண்டும்" என்றும் "நாட்டு மக்கள் நலமுற்று வாழவும் நாநிலத்தவர் மேனிலை எய்தவும், பாட்டிலும் பண்ணிலும் இசைத்து இன்பம் விளைதல் வேண்டும்" என்றும் பொது நெறி வகுத்தார் பாரதி. " வேதங்கள் சொன்னபடிக்கு மனிதரை மேன்மையுறச் செய்ய வேண்டும்" என்று பாரதி விரும்பினார். மனசக்தி பெற்று நல்ல தொழில் செய்யும் உறுதி வேண்டும் என்றான். "சக்தி செய்யும் தொழில்களை எண்ணு நிதம் சக்தியுள்ள தொழில் பல பண்ணு" என்று சக்தி புகழ் பாடுகிறார். பயன் எண்ணாமல் உழைக்கச் சொன்னான் என்னும் தத்துவத்தை சுருங்கச் சொல்லி விளங்க வைக்கிறார் பாரதி. பயன் எண்ணாமல் உழைக்கச் சொன்னாள் என்பது கண்ணனுடைய கீதை, நிஸ் காமிய கர்மம் என்னும் பயனை எதிர்பாாக்காமல் உன் கடமைகளை, உ ன் பணிகளை உன் தொழி ல் களை சோர்வு இல் லாமல் செய்து கொண்டேயிருக்க வேண்டும் என்பதாகும்.அழுது கொண்டேயிருந்தாலும் உழுதுகொண்டேயிருக்கவேண்டும் என்பது சாதாரண கிராமப்புற மக்களுடைய சொலவடையாகும். அதன் பொருள் தொழில் மட்டும் அதாவது வேலைகளை மட்டும் செய்து கொண்டேயிருக்க வேண்டும். அதன் பலன்கள்