பக்கம்:பாரத பண்பாட்டு தளத்தில் பாரதி.pdf/143

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

'பாரதப்பண்பாட்டு தளத்தில் பாரதி அ.சீனிவாசன் 135 " ெய ல் லாம் பயனுற வோங்கு மாங் கே , எண் ணிய எண்ணமெல்லாம் எளிதிலே வெற்றியெய்தும்" என்றும் கூறுகிறார். "இந்த உலகமே பொய் என்று கூறுவது அவச் சொல்லாகும். வீடு கட்டிக் குடித்தனம்பண்ணுவோருக்கு இந்த சாஸ்திரம் பயன்படாது.நமக்கு இந்த உலகத்திற்கு வேண்டியவை, நீண்ட வயது, நோயில்லாமை, அறிவு, செ ல்வம் என்ற நான்கு மாகும். இவற்றைப் பெறுவதற்கு நாம் எல்லா முயற்சிகளையும் மேற்கொள்ள வேண்டும்.அறம், பொருள், இன்பம் என்ற மூன்றிலும் தெய்வ ஒளி காணவேண்டும். தெய்வ ஒளி கண்டால் நான்காம் நிலையாகிய விடுதானாகவே கிடைக்கும் என்று பாரதி குறிப்பிடுகிறார். பாரதி தனது தேசியப்பாடல்களில்தேசபக்தி, தேசவிடுதலை, தேச முன்னேற்றம், தொழில் வளர்ச்சி, கல்வி ஆகிய அனைத்தையும் பற்றி வற்புறுத்துகிறார். இல்லாமையும் கல்லாமையும் நீங்கப் பாடுபடுவது விடுதலை க்கு ம் வழி வகுக் கும். விடுதலை பெறுவதன் மூலம் கல்லாமையையும் இல்லாமையையும் நீக்க வேண்டும் இரண்டையும் இன்னத்து பாரதி கூறுவதைக் காண்கிறோம். பட்டினில் ஆடை, பஞ்சினில் உடை, ஆயுதம் செய்தல், காகிதம் செய்தல், ஆலைகள் வைத்தல், கல்விச் சாலைகள் வைத்தல், குடைகள் செ ய்தல், உழுபடைகள் செய்தல், கோணிகள் செய்தல், இரும்பாணிகள் செ ய்தல், வண்டிகள், கப்பல்கள் செய்தல்முதலிய பலவகைத் தொழில்களையும், கல்வி விஞ்ஞான வளர்ச்சி முதலிய அறிவுத் துறைகளைப் பற்றியும் குறிப்பிட்டு கடைசியில் உலகத் தொழில் அனைத்தும் உவந்து செய்வோம் என்று முடிக்கிறார். உழவுக்கும் தொழிலுக்கும் வந்தனை செய்வோம் என்பதும் திறமை கொண்ட தீமையற்ற தொழில் புரிந்து யாவரும் தேர்ந்த கல்வி ஞானமெய்தி வாழ்வமிந்த நாட்டிலே என்பதும் பாரதியின் அடிப்படைத்தத்துவமாகும். "தொழில் என்னும் தலைப்பிலேயே இரும்பைக் காய்ச்சி உருக்கிடுவிரே எந்திரங்கள் வகுத்திடுவிரே' என்று தொடங்கி, கரும்மைச் சாறு பிழியவும், கடலில் மூழ்கி முத்தெடுக்கவும் மற்றும் புவி மேல் உள்ள ஆயிரமாயிரம் தொழில்கள் செய்யவும் கூறுகிறார். மண்ணை எடுத்துக் குடங்கள் செய்யவும் மரத்தை வெட்டி மனைகள் செய்யவும், உண்ணக்காய் கனி உண்டாக்கவும், உழுது நஞ்சை