பக்கம்:பாரத பண்பாட்டு தளத்தில் பாரதி.pdf/145

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

'பாரதப்பண்பாட்டு தளத்தில் பாரதி அ.சீனிவாசன் 1.37 அரசியல் கிளர்ச்சி முறை பற்றி , 'சுடுதலும் குளிரும் உயிருக்கில்லை, சோர்வு வீழ்ச்சிகள் தொண்டருக்கில்லை எடுமினோ அறப் போரினை என்று காந்தி சொன்னதை அங்கீகரித்து பாரதி குறிப்பிடுகிறார். பாரத சமுதாயம், முப்பது கோடி (இன்று நூறுகோடி யென்றாலும்) ஜனங்களின் சங்க முழுமைக்கும் பொதுவுடமை, ஒப்பில்லாத சமுதாயம், உலகத்திற்கொரு புதுமையாகத்திகழ வேண்டும் என்பது பாரதியின்அரசியல் சமுதாய லட்சியமாகக் குறிப்பிடுகிறார். o, Ur ; , ; ജ്: " ... . . . . (எல்லோரும் ஓர் குலம், எல்லோரும் ஓரினம் எல்லாரும் ஓர் நிறை, எல்லாரும் இந்திய மக்கள், எல்லாரும் இந்நாட்டு மன்னர் எல்லாரும் அமரநிலை எய்தும் நன்முறையே இந்தியா உலகிற்களிக்கும் என்பதே பாரதியின் இலட்சியக்கனவு, அரசியல் நெறியாகும்.) "நாட்டுமாந்தர் எல்லாம்-தம்போல் நரர்களென்று கருதார் ஆட்டு மந்தையாம் என்றுலகை அரசர் எண்ணிவிட்டார் காட்டும் உண்மை நூல்கள் - பலதாம் காட்டினார்களேனும் நாட்டு ராஜ நீதி - மனிதர் நன்கு செய்யவில்லை' என்று தருமன் சூதாட்டதில் நாட்டைப் பணயமாக வைத்து ஆடியதைக் கண்டித்துக் கூறுகிறார். " பேயரசு செய்தால் பினம் தின்னும் சாத்திரங்கள் என்னும் கருத்தாழம் மிக்க ஒரு கவிதை வரியைக் கூறியிருப்பது பாரதியின் சிறப்பாகும். நல்லறம் நாடிய மன்னரை வாழ்த்தி நயம் புரிவாள் எங்கள் தாய் - அவர் அல்லவர்களாயின் அவரை விழுங்கி ஆனந்தக் கூத்திடுவாள்' என்று பாரதி கூறுகிறார். அரசியல் பிழைத்தோர்க்கு அறம் கூற்றாகும். என்பது இளங்கோவடிகளின் வாக்காகும். நாமார்க்கும் குடியல்லோம் நமனையஞ் சோம் என்பது அப்பரடிகள் வாக்காகும். அறம் வெல்லும், பாவம் தோற்கும் என்பது கம்பனது அரச நீதிக் கருத்தாகும். இது நமது நாட்டின்