பக்கம்:பாரத பண்பாட்டு தளத்தில் பாரதி.pdf/149

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

*பாரதப்பண்பாட்டு தளத்தில் பாரதி அ.சீனிவாசன் | 4 | இடங்களிலும் கட்டங்களிலும் பாரதி தனது கவிதைகளில் குறிப்பிட்டுக் கூறியுள்ளார். மூன்றாவதாக சமூகப் பாகுபாடுகள், கொடுமைகள், ஏற்றதாழ்வுகள், திண்டாமை, பெண்ணடிமை முதலிய கொடுமைகளைப் பாரதி மிகக்கடுமையாகச் சாடியுள்ளார். சாதிகொடுகைகளும் சாதிப்பாகுபாடுகளும் வேறுபாடுகளும் நீங்க வேண்டும் என்பதை வலுவாக வலியுறுத்தி தெளிவான சொற்களில் கூறியுள்ளார். சாதி இரண்டொழிய வேறில்லை என்பது தமிழ்த்தாயின் சொற்கள், பாரதி சாதி மதங்களைப் பாரோம் என்றார். சாதி வேறுபாடுகளைக் கூறும்பொய்ச் சாத்திரங்களைப் பொசுக்கிடுவோம் என்று கூறுகிறார்.சாதி நூறு சொல்லுவாய் போ, போ, என்றுபாடினார். சாதியில் இழிவு கொண்ட மனிதர் என்பதிந்தியாவில் இல்லை, அனைவரும் கல்வி செல்வம் பெற்று சரிநிகர் சமானமாக வாழ்வோம் என்பது பாரதி வாக்கு. "சாதிப்பிரிவுகள் சொல்லி - அதில் தாழ்வென்றும் மேலென்றும் கொள்வார் நீதிப்பிரிவுகள் செய்வார் நித்தமும் சண்டைகள் செய்வார் "சாதிக் கொடுமைகள் வேண்டாம் - அன்பு தன்னிற்செழித்திடும் வையம் ஆதரவுற்றிங்கு வாழ்வோம் - தொழில் ஆயிரம் மாண்புறச் செய்வோம்" என்றும் "அறிவை வளர்த்திட வேண்டும்- மக்கள் அத்தனை பேருக்கும் ஒன்றாய் சிறியரை மேம்படச் செய்தால் - பின்பு தெய்வம் எல்லாரையும் வாழ்த்தும் என்றும் கூறுகிறார். கடைசியாக எதிர்கால சந்ததியினரிடம். சாதிகள் இல்லையடி பாப்பா - குலத் தாழ்ச்சி உயர்ச்சி சொல்லல் பாவம் நீதி, உயர்ந்த மதி, கல்வி - அன்பு நிறைய உடையவர்கள் மேலோர் என்று பாப்பாப்பாட்டில் அனைவருக்குமான சமநீதியை சமூக நீதியை வலியுறுத்திப் பாடியுள்ளதைப் பார்க்கிறோம்.