பக்கம்:பாரத பண்பாட்டு தளத்தில் பாரதி.pdf/150

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

"பாரதப்பண்பாட்டு தளத்தில் பாரதி அ.சீனிவாசன் 142 முழுமையான சமூக நீதியோடு கூடிய சமூக விடுதலையைபாரதி வற்புறுத்தினார். நான்காவதாக, அறியாமையிலிருந்தும் கல்லாமையிலிருந்தும் விடுதலை என்பது பாரதியின் உயிர் மூச்சு, கல்வி, அறிவு, ஞானம், செல்வம், ஆ கி ய சொற் கள் பாரதி க வி ைத க ளி ன் அ டி நாத மா கு ம். அறியாமையிலிருந்தும், கல்லாமையிலிருந்தும் விடுதலை பெறுவது அனைத்து விடுதலைக்கும் ஆதாரமானதாகும். வித்தை வளரவேண்டும். கல்வி பெருக வேண்டும். விடுதோறும் கலையின் விளக்கம், வீதிதோறும் இரண்டொரு பள்ளி, நாடு முற்றிலும் உள்ள ஊர்கள், நகர்கள் எங்கும் பலபல பள்ளி, தேடுகல்வியிலாததொரு ஊரை தீக்கிரையாக்குவோம், கேடு தீர்க்கும் அமுதமென் அன்னை என்று பாரதியின் கருத்துக் கவிதைக்கு ஈடு இணையே இல்லை. உலகில் இத்தகைய உயரிய கவிஞன் இதுவரை பிறந்ததில்லை. இன்னும் கல்வியையும் உழைப்பயுைம்இணைக்கிறார். ஓங்கு கல்வி உழைப்பை மறக்காதீர் என்றார். எல்லாவற்றிற்கும் மேலாக கல்வி கற்க வேண்டிய அவசியத்தை வற்புறுத்தினார். கல்வி கற்று அறிவுத் தெளிவு ஏற்பட்டுவிட்டால், இதர பிரச்சனைகளை தீர்ப்பதற்கான வல்லமை, மனோதிடம் நமக்கு ஏற்பட்டுவிடும். சோலைகள் செய்தல், சுனைகள் இயற்றல், அன்ன சத்திரம் ஆயிரம் வைத்தல், ஆலயங்கள் பதினாயிரம் கட்டுதல், இன்னும் எத்தனையோ தர்ம காரியங்கள் செய்தாலும், அன்னயாவினும் புண்ணியம் கோடி ஆங்கோர் ஏழைக்கு எழுத்தறிவித்தல் என்று பாரதி கூறிய சொல்லுக்கு இணையே இல்லை. கல்வியிலே மதியினை நீ தொடுக்க வேண்டும் என்று நமது கவனத்தை பாரதி ஈர்க்கிறார். ஐந்தாவதாக, பெண் விடுதலை பற்றி இத்தனை சுத்தமாகப் பேசியவன் பாரதியைப் போல் யாருமில்லை என்பதை உறுதியாகக் கூறலாம். மாதர்தம்மை இழிவு செய்யும் மடமையைக் கொளுத்துவோம், வைய வாழ்வு தனனில் எந்த வகையிலும் நமக்குள்ளே தாதர் என்ற நிலைமை மாறி ஆண்களோடு பெண்களும் சரி நிகர் சமானமாக வாழ்வமிந்த நாட்டிலே என்றும் அறிவுயாவும் பயிற்சியில் வென்றே கடமை செய்வீர், நம் தேசத்து விரக்காரிகைக் கணத்தீர் துணிவுற்றே என்றும், கற்புநிலை என்றால் இருவருக்கும் பொதுவென்று வைப்போம் என்றும், நாணும் அச்சமும் நாய்களுக்கு வேண்டுமாம் என்றும் நிமிர்ந்த நன்னடை நேர் கொண்ட