பக்கம்:பாரத பண்பாட்டு தளத்தில் பாரதி.pdf/155

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

"பாரதப்பண்பாட்டு தளத்தில் பாரதி அ.சீனிவாசன் 147 பாரதியின் உலகளாவிய தத்துவம் பாரதியின் தத்துவம் உலகளாவியதத்துவமாகும். உலகக் கண்ணோட்டம் கொண்டதாகும். மனிதனையும்இதர உயிர்ப் பொருள்கள் மற்றும் இயற்கைப் பொருள்கள்.அனைத்தையும் உள்ளிட்டதாகும். பஞ்ச பூத சக்திகளுடனும் சூரியசந்திர நட்சத்திரங்கள் மற்றும் கிரகசக்திகளுடனும் இணைந்து வாழ்வதாகும். உலகில் உள்ள பொருள்கள் அனைத்தும் உலகமனைத்தும் மனிதனுக்காகவே படைக்கப்பட்டது எனவும் அதனால் மனிதன் அவைகளைத் தனக்காக எப்படியும் பயன்படுத்திக் கொள்ளலாம் எனவும் ஏற்பட்ட கருத்து மேலோங்கி, இன்று உலக அமைப்பில் சிதைவுகள் ஏற்பட்டும் இயற்கைச் சூழலும் சுற்றுச் சூழலும் பாதிக்கப்பட்டிருக்கிறது. இந்த நேரத்தில் பாரதியை நினைவு கூற வேண்டும். இந்திய தத்து வங்களே இயற்கையோ டி சைவான வாழ்க்கை முறை யின் தத்துவங்களாகும். அது பாரதப் பண்பாட்டின்அடிப்படையாகும். நமது தெய்வங்களுக்குள்ள வாகனங்களும் கோவில்களில் உள்ள குளங்களும் ஸ்தலவிருட்சங்களும் இயற்கையோடு இணைந்த, இசைவான வாழ்க்கை அமைப்பைக் குறிப்பனவே யாகும். அதாவது நம்மைச் சுற்றியுள்ள, விலங்குகள், பறவைகள், விருட்சங்கள் இதர தாவரங்கள், நீர்நிலைகள் முதலியன வெல்லாம் நாம் வணங்கும் தெய்வங்களோடு இணைந்தவை. நமது வணக்கத்திற்கும் பூசைக்கும் உரியன. இந்த தத்துவங்கள் எல்லாம் இடைக்காலத்தில் வளர்ச்சிகுன்றிப் போயின. சில பூசை அறைகளில் மட்டும் முடங்கி ப் போயின. அன்னியதத்துவங்களின் தாக்கத்தாலும் தாக்குதல்களாலும் பாதிக்கப்பட்டுப் போயின. ஆங்கிலேயர் ஆட்சி காலத்தில் அவை தாழ்த்தப்பட்டு புறக்கணிக்கப்பட்டன. மூடப்பழக்க வழக்கங்களோடும் சில பொய்மைச் சாத்திரங்களோடும் இணைக்கப்பட்டன. ஒதுக்கப்பட்டன. ஆனால் அண்மைக்காலமாக அனுபவத்தில் சில உண்மைகளை கடினமான உண்மைகளை சந்திக்க வேண்டியகட்டாயம் ஏற்பட்டிருக்கிறது. உலகம் முழுவதிலும் ஏற்பட்டுள்ள சில புதிய விழிப்புணர்வுகளும் பல புதிய உ ண் ைம க ைள த ைர மே ல் ட் டத் தி ற்கு கொண் டு வ ர ப் பட் டு வெளிப்படுத்தியிருக்கின்றன. உலகத்தைக் காக்க வேண்டும். அதை மனிதன் வாழ்வதற்கு உகந்ததாக ஆக்க வேண்டும் என்னும் கருத்துக்கள் வலுவாகத் தோன்றி வளரத் தொடங்கியுள்ளன. காற்று, கடல், மலைகள், காடுகள், ஆறுகள்,