பக்கம்:பாரத பண்பாட்டு தளத்தில் பாரதி.pdf/159

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

*பாரதப்பண்பாட்டு தளத்தில் பாரதி அ.சீனிவாசன் 151 எல்லா உயிர்களிலும் நானே இருக்கிறேன் என்றுரைத்தான் கண்ண பெருமான் எல்லாரும் அமரநிலையெய்தும் நன்முறையை இந்தியா உலகிற்கு அளிக்கும் என்னும் நம்பிக்கையுடன் பாரத சமுதாயத்தை வாழ்த்துகிறார். i நமது பாரத புண்ணிய பூமி, அன்னிய ஆட்சியிலிருந்து விடுதலை பெற்று ஐம்பது ஆண்டுகளுக்கு மேலாக கடுமையான கரடு முரடான பாதையில் முன்னேறிக் கொண்டிருக்கிறது. பாரதியின் வழியில் இன்னும் வெதுதுாரம் செல்லவேண்டியதிருக்கிறது. பாரதியின் பாரதத்துவ மரபுவழி தொடர வேண்டும். பாரதி தனது கவிதைகளைப் பாடும்போது பாரத நாட்டின் எல்லாவித இசை வழி மரபுகளையும் பண்பாடுகளையும் பின் பற்றியிருக்கிறார். கர்நாடக இசை, இந்துஸ்தானி இசை, நொண்டிச்சிந்து, கிளிக்கண்ணி, காவடிச்சிந்து, பண்டாரப்பாட்டு, பள்ளுப்பாட்டு, ஆனந்தக் களிப்பு மற்றும் அவர் காலத்தில் வாழையடிவாழையாக நிலவி வந்த பலவகையான நாட்டுப்புற இசை அமைப்பு முறைகளையும் பயன்படுத்தி எல்லாவகையான இசை ரசங்களையும் கையாண்டு வெண்பா, கலித்துறை விருத்தம் அகவல் வசன கவிைைத முதலிய ப ல வ கைத் த மி ழ க க் கவி ைத வ டி வங் க ைள யு ம் மு ன் வைத்துப்பாடியுள்ளார். தமிழ் சமுதாயத்தின் அனைத்து பண்பாட்டு வடிவங்களின் கூட்டு உடன்பாட்டு நிலையில் பாரதி அனைத்தளாவிய தன்மை கொண்ட முழு வடிவத்திலான கவிக்குயிலாகத் திகழ்ந்துள்ளார். கடைசியாக அவர்குடுகுடுப்பைப் பாட்டு வடிவத்தையும் விட வி ல் ைல பு தி ய கோண ங் கி யாக வே ட ம் த ரித் து குடுகுடுப்பபைக்காரனாக நம் முன்னே வந்து நின்று நல்ல காலம்வருகிறது என்று குறிசொல்லி மிகவும் அபூர்வமான பல சிறந்த கருத்துக்களை முன்வைத்துப் பாடுகிறார். "குடுகுடு, குடுகுடு, குடுகுடு, குடுகுடு நல்லகாலம் வருகுது, நல்ல காலம் வருகுது. சாதிகள் சேருது, சண்டைகள் தொலையுது சொல்லடி சொல்லடி சக்தி, மகாகாளி, வேத புரத்தாருக்கு நல்ல குறி சொல்லு, "தரித்திரம் போகுது, செல்வம் வருகுது படிப்பு வளருது, பாவம் தொலையுது படிச்சவன் சூதும் பாவமும் பண்ணினால் போவான் போவான் ஐயோன்னு போவான்.