பக்கம்:பாரத பண்பாட்டு தளத்தில் பாரதி.pdf/17

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

'பாரதப்பண்பாட்டு தளத்தில் பாரதி அ.சீனிவாசன் 9 இந்து தர்மமே, வழிபாட்டு சுதந்திரம் கொண்டதாகவும். சமய சமரசத்தைக் கொண்டதாகவும், எம்மதமும் சம்மதம் என்னும் பரந்த நெறிமுறையை, பண்பாட்டுதளமாகக் கொண்டது என்பதையும். உலகியல் வாழ்க்கையைப் பற்றி அதிகமாக வற்புறுத்துவது என்பதையும் காண முடிகிறது. மிகப்பெரும்பாலான இந்தியதத்துவ ஞானிகளும், உலக வாழ்க்கை, தனிமனித வாழ்க்கை, இயற்கை, இயற்கையுடன் இணைந்து நிற்கும் மனித வாழ்க்கை, பஞ்சபூதங்களின் பயன்பாடு, தொழில், தொழில் பயன், பொருளியல், அரசியலோடு இணைந்த பொருளியல், அறவழியில் அனைத்து செயல்பாடுகள் ஆகியவற்றையே அதிகமாக வலியுறுத்திக் கூறியுள்ளனர். பாரத நாட்டின் ஆதார நூல்களில் மனு நீதி தர்ம மும் , கெளடில்யரின் அர்த்த சாஸ்திரமும் வத்சாயனருடைய காம சூத்திரமும் அதே போல வேதங்கள், உபநிடதங்கள், பிரமசூத்திரம் பகவத்கீதை மற்றும் சுக்கிரநீதி, விதுரநீதி, வியாச நீதி மற்றும் இராமாயணம் மகாபாரதம் ஆகிய இதிகாசங்கள், புராணக் கதைகள் மூலம் எடுத்துரைக்கப்படும் அரச நீதி ஆகியவை வாழ்க்கை நெறிமுறைகளை இணைத்தே வலியுறுத்தப்பட்டிருக்கின்றன. இவைகளில் பொதுநீதி, தனி மனிதன் மற்றும் சமுதாயக் கடமைகள், பொருளியல் உற்பத்தி முறைவினியோக முறை, குடும்பவாழ்க்கை முறை ஆகியவை எடுத்துக் கூறப் பட்டிருக்கின்றன. இவைகளை நன்கு கற்று ணர்ந்து அக்கருத்துக்களில் வேர்ஊன்றி நின்று, அவைகளில் காலம் கடந்து .ே ப ா ன ைவ க ைள யு ம் த வ ற | ன மு ைற யி ல் திரித்துக்கூறப்பட்டவைகளையும் உதரி எரிந்துவிட்டு புது நெறியை பாரதி வகுத்துக் கூறியுள்ளார். பாரதி தனது கண்ணன் பாட்டுகளில் கண்ணன் - என்தாய் என்னும் தலைப்பிலான பாடலில் கீழ்க்கண்டவாறு குறிப்பிடுகிறார். "சாத்திரம் கோடிவைத்தாள் - அவை தம்மில் உயர்ந்ததோர் ஞானம் வைத்தாள் மீத்திடும் பொழுதினிலே - நான் வேடிக்கையுறக் கண்டு நகைப்பதற்கே கோத்த பொய் வேதங்களும் - மதக் கொலைகளும் அரசர்தம் கூத்துக்களும் மூத்தவர் பொய்நடையும் - இள மூடர்தம் கவலையும் அவள் புனைந்தாள் என்றும், கண்ணன் என் தந்தை என்றும் தலைப்பில்,