பக்கம்:பாரத பண்பாட்டு தளத்தில் பாரதி.pdf/20

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

"பாரதப்பண்பாட்டு தளத்தில் பாரதி அ.சீனிவாசன் 12 மாணவப் பருவத்தில் (பிரம்மச்சரிய ஆசிரமத்தில்) கல்வி கற்றல், சகல கலைகளிலும் பயிற்சி பெறுதல், சிறந்த மனிதனாக, அறிவு ஆற்றல், ல் லம் முதலிய சிறப்புகளைப் பெற்று பக்குவடைதல் ஆகியவை முக்கியமான கடமைகளாக சிறப்பு தர்மங்களாகக் கூறப்படுகின்றன. இப் பருவத்தில் மாணவன் சகல நல்ல ஒழுக்கங்களையும் கற்றுக் கொள்கிறான். எளிமையான வாழ்க்கை சக மாணவர்களுடன் நட்புறவு ஆழ்ந்த கவனத்துடன் சகல கலைகளையும் கற்றுக் கொள்ளுதல், ை ற்பயிற்சி செய்தல், வாழ்க்கையில் கட்டுப்பாடுகளை வளர்த்தல், வாழ்க்கையில் எதிர்காலத்தில் ஏற்படும் எந்த பிரச்சனையையும் சமாளிக்கும் திறனைப் பெறுதல், நாட்டின் சிறந்த பிரஜையாக சகல விதத்திலும் பயிற்சி பெற்று, வீட்டிற்கும் நாட்டிற்கும் பயனுள்ள வகையில் பக்குவமடைதல் முதலியன வலியுறுத்தப்படுகின்றன. இன்றைய நிலையில் அந்த கடமைகள், ஆண் பெண் இருபாலருக்கும் பொருந்தும், அவ்வாறே கிரகஸ்தன் இல்லறத்தில் உள்ளவன், பொருள் சே ர்த்தல், குடும்பத்தைப் பராமரித்தல், குழந்தைகளைப் பராமரித்தல், முதியோர்களைப் பாதுகாத்தல், சமுதாய நலன்களைப் பேணுதல், நாட்டு நலன்களைப் பேணுதல், நாட்டு நலன்களைக் காத்தல் முதலிய சிறப்புக் கடமைகள் தருமமாக வலியுறுத்தப்படுகின்றன. இவ்வாறே இந்து சாத்திரங்கள் இதர ஆசிரமங்களின் கடமைகளையும் விரித்துக் கூறுகின்றன. நமது தமிழ் அற நூல்களும் இவைகளை விரித்துக் கூறுகின்றன. வள்ளுவப்பெருந்தகை தனது முப்பால் நூலில் மிகவும் விரிவாகவும் துல்லியமாகவும் அடிப்படை அறங்களைப் பற்றி மிகவும் சிறப்பாக எடுத்துக் கூறியுள்ளார். இந்த நான்கு ஆசிரம தர்மங்கள் இந்து வாழ்க்கை நெறி முறையின் அடிப்படையான தர்மங்களாகும். அறம், பொருள், இன்பம், வீடு என்னும் புருஷார்த்தங்களின் அடிப்படையிலேயே நான்கு பிரிவான சிறப்புக் கடமைகள், தனித்தனி தர்மங்கள் வகுக்கப்பட்டு விவரிக்கப்படுகின்றன. இவை மிகவும் துல்லியமாக வகுக்கப்பட்ட சமூக நெறியாகும். கல்வி, தொழில், செல்வப் பெருக்கம், சீரிய செழிப்பான வாழ்க்கை முறை அறவாழ்க்கை மனிதகுலம் தலைமுறை தலைமுறையாக வாழையடி வாழையாக வளம்பெற்று சகல நலன்களும் சக்தியும் கல்வியும் செல்வமும் பெற்று வாழ்வாங்குவாழ்தல், மனிதன் தனது பிறப்பின் கடமைகளை முழுமையாக நிறைவேற்றி இறுதியில் முக்தி பெறுதல், விடு பேறு ஆகியவை, நெறிமுறைப்படுத்தப்பட்டிருக்கின்றன. இங்கு சீரும் சிறப்புமாக வாழ்க்கையை அமைத்துக் கொண்டு அனுபவித்தல் என்பது மிக முக்கியமானதாகும். எனவே இந்து தர்மம் என்பது அடிப்படையில் வாழ்வியல் உலகியல், அனைத்து சமய சமரசம், அறவழியில் அனைத்து உறவுகளையும் வளர்த்தல் அறிவியல் சமுதாய வளர்ச்சி ஆகியவைகளை ஆதாரமாகக் கொண்டு அறவியல் பொருளியல் சீரான குடும்ப வாழ்க்கை ஆகியவைகளை அமைத்துக் கொள்வதாகிறது. இக்கருத்துக்களை பாரதி தனது கவிதா மண்டலம் முழுவதிலும் சடர்விட்டு ஒளிவீச்ச் செய்கிறார்.