பக்கம்:பாரத பண்பாட்டு தளத்தில் பாரதி.pdf/24

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

*பாரதப்பண்பாட்டு தளத்தில் பாரதி அ.சீனிவாசன் 16 "அச்சமில்லை, அமுங்குதலில்லை நடுங்குதலில்லை, நாணுதல் இல்லை பாவமில்லை, பதுங்குதலில்லை பிரது நேரினும் இடர்ப்பட மாட்டோம் அண்டஞ்சிதரினால் அஞ்சோம் கடல் பொங்கி எழுந்தால் கலங்கமாட்டோம் யார்க்கும் அஞ்சோம் எப்பொழுதும் அஞ்சோம் எங்கும் அஞ்சோம் எப்பொழுதும் அஞ்சோம் தியும் மண்ணும் திங்களும் மீன்களும் உடலும் அறிவும் உயிரும் உளவே தின்னப் பொருளும் சேர்ந்திடப் பெண்டும் கேட்கப்பாட்டும் கானநல்லுலகும் களித்துரை செய்யக் கணபதி பெயரும் என்றுமிங் குளவாம் சலித்திடாய் ஏழை நெஞ்சே வாழி, நேர்மையுடன் வாழி' என்று அச்சத்தைப் போக்கி கவலையை நீக்கி சலிப்பு இல்லாமல் வாழ்க்கையிலும் வாழ்க்கைத் தொழிலிலும் ஈடுபட பாரதி ஊக்க முட்டுகிறார். "நமக்குத் தொழில் கவிதை நாட்டிற்குழைத்தல் இமை ப்பொழுதும் சோராதிருத்தல்" என்றும், "நாட்டினைத் துயரின்றி நன்கமைத்திடுவதும் உளமெனும் நாட்டை ஒரு பிழையின்றி ஆள்வதும் பேரொளி ஞாயிறேயனைய சுடர்தரு மதியொரு துயரின்றி வாழ்தலும் நோக்கமாக்கொண்டு நின்பதம் நோக்கினேன்" என்றும், "பண்டைச் சிறுமைகள் போக்கி என் நாவில் பழுத்த சுவைத் தெண்டமிழ்ப்பாடல் ஒரு கோடி மேவிடச் செய்குவையே" என்றும் தனது வாழ்க்கைக் குறிக்கோள்களை நாட்டு ப் பணிகள் கடமைகளுடனும்சமுதாயக் கடமைகள் பணிகளுடனும் இணைத்து நமக்கு எடுத்துக்காட்டாக தனது கருத்துக்களை பாரதி தனது கவிதைகளில் வகுத்துக் காட்டியுள்ளார். "அகண்ட வெளிக்கண் அன்பே சூழ்க, துயர்கள் தொலைந்திடுக, தொலையா இன்பம் விளைந்திடுக, வீழ்க கலியின் வலியெலாம் கிருதயுகம் தான் மேவுகவே" என்றும்"வையகத்தில் அன்பிற் சிறந்த தவமில்லை" என்றும்