பக்கம்:பாரத பண்பாட்டு தளத்தில் பாரதி.pdf/27

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

*பாரதப்பண்பாட்டு தளத்தில் பாரதி அ.சீனிவாசன் 19 பகவத்கீதை எழுதப்பட்டது" என்று குறிப்பிடுகிறார். இதுவே, வாழ்க்க்ைத்தத்துவத்தைப் பற்றி, பாரதியின் தெளிவான கருத்தாகும். வாழ்க்கை இன்டிங்களை முழுமையாக அனுபவிக்க வேண்டும் என்பதை பாரதி வலியுறுத்துகிறார். அப்படியானால் மனித வாழ்க்கைக்கு அவசியமான எல்லா பொருள்களும் உற்பத்தி செய்யப்பட வேண்டும். உயிர் வாழ்வதற்கான உணவு, உடை, உறைவிடம் முதலியவை மட்டுமல்லாமல், மனித வாழ்க்கை மகிழ்ச்சியாக அமைவதற்காக நாடகம், சினிமா, வானொலி, தொலைக்காட்சி, சங்கீதம், கவிதை, கல்வி, கல்வி கற்பதற்கான சாதனங்கள் வசதிகள், விளையாட்டு வசதிகள், நூல்கள், மன்றங்கள் வைத்தியவசதிகள் சுகாதாரம், கோயில் குளங்கள், திருவிழாக்கள் அவைகளுக்கு வேண்டிய சாதனங்கள் முதலியனவும் மற்றும் அதற்கு துணையான பல பொருட்கள் அவசியமானது ஆகும். அவைகள் எல்லாம் ஆக்கப்படவேண்டும், படைக்கப்படவேண்டும். வாழ்க்கை வசதிகள் அனைத்தும் வேண்டும் என்பதற்காக அதை எந்த வழியிலும் சம்பாதிக்க வேண்டும் என்னும் வழிமுறையை பாரதி ஏற்றுக்கொள்ள வில்லை. அத்தகைய முறைகளை பாரதி கடுமையாகச் சாடுகிறார். அவைகளை முற்றிலும் நிராகரித்து விடுகிறார். "திறமைகொண்ட, தீமையற்ற தொழில் புரிந்து யாவரும், தேர்ந்த கல்வி ஞானம் எய்தி வாழ்வோம் இந்த நாட்டிலே" என்பது பாரதியின் வாக்காகும். இன்னும் " வஞ்சமற்ற தொழில் புரிந்து வாழும் வாழ்க்கை வேண்டும்" என்பதும் "திருவைப்பணிந்து நித்தம் செம்மைத்தொழில் புரிந்து வருக" என்பதும், "பயிற்றி உழுதுண்டு வாழ்விர்- பிறர் பங்கைத்திருடுதல் வேண்டாம்" என்பதும், "தன்னலம் பேணி இழிதொழில் புரியோம்" என்பதும் பாரதியின் கவிதை வாக்குகளாகும். சூதும் வாதும், பொய் மையும் வஞ் சக மும் நிறைந்த விலங்கினவாழ்க்கை நிலைக்கு மாறாக சத்தியத்தின் வழியிலான அறவியல், அறிவியல் வாழ்க்கை மனித குலத்திற்கு அமைய வேண்டும் என்பதை பாரதி நமது நாட்டின் மரபுவழியில் எடுத்துக் கூறுகிறார். "வேதவானில் விளங்கி அறம் செய்மின் சாதல் நேரினும் சத்தியம் பூணுமின், திதகற்று மின்' என்று தொடங்கி,